இந்திய விமானப்படை 1950 சட்டத்தின் கீழ், அக்னிவீரர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து வகுப்பகளையும் சேர்ந்த இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விமானப்படையின் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த வகையான பணிகளிலும் அக்னிவீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அக்னிபுத் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி மருத்துவ விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பழைய நடைமுறையில் சோல்ஜர் ஜெனரல் டியூட்டி போன்ற பதவிகளுக்கு 60 நாட்கள் விடுப்பு, சாதாரண விடுப்பு 30 நாட்கள் வழங்கப்பட்ட நிலையில் அக்னிவீரர்களுக்கு வெறும் 30 நாட்கள் மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்காலத்தின் போது, அக்னிவீரர்கள் விமானப் படையின் மருத்துவ மற்றும் கேண்டீன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் அக்னிவீரர்கள் அனைவரும் கட்டாயம் சமூகத்திற்கு திரும்ப வேண்டும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப, ஆர்வமுள்ள அக்னிவீரர்கள் இந்திய விமானப் படையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். நான்கு ஆண்டு பயிற்சி காலத்தில் பெற்ற திறன்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்படும். மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறையின் அதிகபட்சமாக 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அக்னிவீரர்களுக்கு தனித்துவ சின்னம் பொருந்திய ஆடை வழங்கப்படும்.
சம்பளம்:
Year |
மாதாந்திர ஊதியம் |
கையில் கிடைக்கும் தொகை (70%) |
அக்னி வீரர் தொகுப்பு நிதி |
தொகுப்பு நிதிக்கு அரசு அளிக்கும் தொகை |
|
முதலாம் ஆண்டு |
30000 |
21000 |
9000 |
9000 |
இரண்டாம் ஆண்டு |
33000 |
23100 |
9900 |
9900 |
மூன்றாம் ஆண்டு |
36500 |
25580 |
10950 |
10950 |
நான்காம் ஆண்டு |
40000 |
28000 |
12000 |
12000 |
4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட தொகை
|
ரூ. 5.02 லட்சம் |
ரூ 5.02 லட்சம் |
நான்கு ஆண்டுகளுக்கு சேவை நிதியில் இருந்து செலுத்தப்படும் தொகை (வட்டித் தொகை நீங்கலாக) |
ரூ. .10.04 லட்சம் |
அசாதாரணமான சூழ்நிலையில் மட்டுமே, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விடுவிக்க கோரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்வது கட்டாயமாகும்.
வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயதாகும். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.