Home /News /employment /

Indian Air Force Recruitment | என்ன பதவி? என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

Indian Air Force Recruitment | என்ன பதவி? என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Indian Air Force Recruitment | இந்திய விமானப்படை அறிவித்துள்ள இந்த வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு என்ன? தகுதிக்கான அளவுகோல் என்ன? ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

இந்திய விமானப்படை (Indian Air Force - IAF) ஆனது 4 குரூப் சி சிவிலியன் பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்ப விருப்பமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கி உள்ளது.

இந்த வேலைவாய்ப்பின் கீழ் இந்திய விமானப்படை நான்கு காலியிடங்களை நிரப்ப உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ‘லோயர் டிவிஷன் கிளார்க்’ பதவிற்கு 'ஆஃப்லைனில்' விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு செய்திகள் / ரோஸ்கர் சமாச்சாரில் இந்திய விமானப்படையின் இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அதாவது 2022 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை அறிவித்துள்ள இந்த வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு என்ன? தகுதிக்கான அளவுகோல் என்ன? ஆஃப்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? போன்ற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.

இந்திய விமானப்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2022: காலியிட விவரங்கள்

முன்னரே குறிப்பிட்டபடி அறிவிக்கப்பட்டுள்ள லோயர் டிவிஷன் கிளார்க் (Lower Division Clerk - LDC) பதவிக்கு 4 காலி இடங்கள் உள்ளன.

இந்திய விமானப்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2022: வயது வரம்பு

நவம்பர் 28, 2021 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 க்குள் இருக்க வேண்டும்.

இந்திய விமானப்படையின் இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

இந்திய விமானப்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2022: தகுதிக்கான அளவுகோல்

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட போர்டில் இருந்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்ப்யூட்டரில் ஒரு நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகளையும் (35 wpm in English) அல்லது 30 ஹிந்தி வார்த்தைகளையும் (35 wpm in Hindi) டைப் செய்யும் வேகத்தினை கொண்டிருக்க வேண்டும் (35 wpm மற்றும் 30 wmp ஆனது ஒவ்வொரு வார்த்தைக்கும் சராசரியாக 5 கீ டிப்ரெஷன்ஸ் (Key depressions) என 10500 KDPH/9000 KDPH க்கு ஒத்ததாக இருக்கும்)

இந்திய விமானப்படை குரூப் சி வேலைவாய்ப்பு 2022: எப்படி விண்ணப்பிப்பது

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களின் சமீபத்திய புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு) முறையாக சுய சான்றொப்பமிடப்பட்ட ஒரு விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலம் / ஹிந்தியில் டைப் செய்து அனுப்புவதன் மூலம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். வேறு ஏதேனும் துணை ஆவணம் அனுப்பப்பட்டால் அது (சுய-சான்றளிக்கப்பட்ட), முத்திரையுடன், ரூ.10 ஸ்டாம்ப் ஓட்டப்பட்ட சுய முகவரியிடப்பட்ட கவர் உடன் அனுப்பப்பட வேண்டும். மேலும் உங்களின் முகவரி ஆங்கிலம் / ஹிந்தியில் டைப் செய்யப்பட வேண்டும்.
Published by:Selvi M
First published:

Tags: Government jobs, Recruitment

அடுத்த செய்தி