ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய விமானப்படையில் அக்னிபாத் வீரராக வேண்டுமா? விண்ணப்பிக்க 24-ம் தேதியே கடைசி நாள்!

இந்திய விமானப்படையில் அக்னிபாத் வீரராக வேண்டுமா? விண்ணப்பிக்க 24-ம் தேதியே கடைசி நாள்!

அக்னிபத் வேலைவாய்ப்பு

அக்னிபத் வேலைவாய்ப்பு

Indian Air Force IAF Agneepath Recruitment: வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி மருத்துவ விடுப்பு வழங்கப்படும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  Indian Air Force IAF Agneepath Recruitment:  இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர் வாயு (AGNIVEERVAYU) பிரிவில் விண்ணப்பம் செய்வதற்கான நாளை மறுநாளுடன் (24.02.2023) முடிவடைகிறது. திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 23-11-2022 (மாலை 5 மணி வரை)

  கல்விதகுதி:  கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடநெறிகளுடன் 10+2/சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  (அ)

  அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/ இன்பர்மேஷன் டெக்னாலஜி) 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி

  (அ)

  தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருடத் தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு (சிபிஎஸ்இ பாடத்திட்டம்), சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, தழுவல் இயல்பு தேர்வு I (Adaptability Test),  தழுவல் இயல்பு தேர்வு II, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்க்கை முறை நடைபெறும்.

  மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை, விண்ணப்ப செயல்முறை தொடர்பான அனைத்து விபரங்களும்  https://agnipathvayu.cdac.in/AV/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

  சம்பளம்:  முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.சம்பளம் முதல் வருடம் மாதம் ரூ.30,000 முதல் தொடங்கும். நான்கு ஆண்டுகள் முடிவில் வட்டி இல்லாமல் ரூ.10.04 லட்சம் வரை சம்பளமாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

  இதையும் வாசிக்க வேலை கிடைக்காதவர்களுக்கும் வேலை உறுதி... அரசின் அசத்தல் திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

  வயது வரம்பு: 27 ஜூன் 2022 மற்றும் 27 டிசம்பர் 2005 ஆண்டுகளுக்கு இடையே பிறந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 21 வயது இருக்க வேண்டும்

  விண்ணப்பிக்கும் முறை : இந்திய விமானப்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனின் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn

  அக்னிபுத் திட்டத்தின் கீழ், வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்பு மற்றும் மருத்துவ அதிகாரியின் பரிந்துரைப்படி மருத்துவ விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத் துறையில் வேலை

  நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் அக்னிவீரர்கள் அனைவரும் கட்டாயம் சமூகத்திற்கு திரும்ப வேண்டும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப, ஆர்வமுள்ள அக்னிவீரர்கள் இந்திய விமானப் படையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Agnipath