மத்திய அரசு இந்திய இளைஞர்களுக்காக அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தில் தற்போது இந்திய விமானப்படையில் சேர விரும்பும் இளைஞர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். எப்படி விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதிகள் என்ன என்பதை இதில் காணலாம். இதற்காக விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இதற்கான கால அவகாசம் நாளையோடு நிறைவடைய உள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் நாட்டு இளைஞர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது ராணுவத்தில் பணியாற்ற தேவைப்படும் உடற்தகுதியே அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கும் உடற்தகுதியாக உள்ளது.
இளம்வயதில் நாட்டிற்கு சேவையாற்றும் வாய்ப்பினை பெரும் விதமாக இந்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் இந்திய விமான படை , கப்பற்படை , ராணுவம் என முப்படைகளிலும் ஆட்கள் சேர்க்கப்பட உள்ளனர். பணியில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் நாட்டிற்கு சேவையாற்ற பணியில் அமர்த்தப்படுவர்.
இந்த திட்டத்தில் 17.05 வயது முதல் 21 வயது வரையிலான ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பித்து பயன்பெறலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் மொத்தம் 45,000 பேருக்கு வாய்ப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமான படையில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஜூலை 5ம் தேதி வரை ( நாளை வரை ) தகுதி உடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்க உள்ளது.
உயரம் (Height) | ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ |
மார்பு (Chest ) | குறைந்தபட்ச விரிவாக்க வரம்பு : 5 செ.மீ |
எடை ( Weight) | Proportionate to height and age |
Corneal Surgery | கருவிழி அறுவை சிகிச்சை Corneal Surgery ஏற்கத்தக்கது அல்ல. |
கேட்டல் (Hearing) | சாதாரண செவித்திறன் இருக்க வேண்டும். |
பல் ( Dental ) | ஆரோக் கியமாக வைத்திருத்தல் போதுமானது |
கல்வித் தகுதி (Educational Qualification ) :
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு , 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 50% மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடமாக கொண்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது ) பொறியியலில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். (மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி/தகவல் தொழில்நுட்பம்) அரசு அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50% மதிப்பெண்களுடன்
டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் மொத்தம் 50% மதிப்பெண்கள் (அல்லது இடைநிலை/மெட்ரிகுலேஷன், டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால்).
(அல்லது ) தொழிற்கல்வி அல்லாத பாடத்துடன் 2 வருட தொழிற்கல்விப் படிப்பில் தேர்ச்சி. மாநில கல்வி வாரியங்கள்/கவுன்சில்களில் இருந்து இயற்பியல் மற்றும் கணிதம்
தொழிற்கல்வி பாடத்தில் (அல்லது இடைநிலை/) ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அக்னிபாத் விமானப்படை வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடைய நபர்கள் கீழ்காணும் ஆவணங்களை இணைக்க வேண்டும். (Agneepath Recruitment 2022)
1. 10ம் வகுப்பு/மெட்ரிகுலேஷன் தேர்ச்சி சான்றிதழ்
( அல்லது)
2. இடைநிலை/10+2 (Intermediate/10+2)
(அல்லது)
3. அதற்கு சமமான மதிப்பெண் தாள் (mark sheet)
(அல்லது)
4. 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ இறுதியாண்டு மதிப்பெண் பட்டியல் (அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டு பொறியியல் டிப்ளமோ அடிப்படையில் விண்ணப்பித்தால்
பரிந்துரைக்கப்பட்ட பிரிவில் பாலிடெக்னிக்) மற்றும் மெட்ரிகுலேஷன் மதிப்பெண் பட்டியல் (டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் பாடமாக இல்லை என்றால்).
(அல்லது)
5. 2 ஆண்டுகள் தொழிற்கல்வி பாடப்பிரிவின் மதிப்பெண் பட்டியல் (mark sheet) மற்றும் ஆங்கிலம், இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் கூடிய தொழில் அல்லாத பாடத்தின் மதிப்பெண் பட்டியல்கள்.
6. பாஸ்போர்ட் அளவு சமீபத்திய வண்ண புகைப்படம் ( ஏப்ரல் 2022 க்கு பின்னர் எடுக்கப்பட்டது ) அளவு 10 KB முதல் 50 KB வரை
7. ஒரு ஸ்லேட்டில் வெள்ளை நிறத்தில் பெயர் மற்றும் தேதி எழுதி மார்பின் முன் வைத்தவாறு படம் எடுத்து அனுப்ப வேண்டும்.
8. எடுக்கப்பட்ட புகைப்படம், பெரிய எழுத்துகளில் வெள்ளை சுண்ணாம்பினால் தெளிவாக எழுதப்பட வேண்டும்.
9. விண்ணப்பிப்பவர்கள் இடது கை கட்டைவிரல் படம் (அளவு 10 KB முதல் 50 KB வரை).
10. விண்ணப்பிப்பவர்கள் கையெழுத்துப் படம் (அளவு 10 KB முதல் 50 KB வரை).
11 . விண்ணப்பிப்பவர்கள் பெற்றோரின் (தந்தை/தாய்)/பாதுகாவலரின் கையொப்பப் படம் (விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதியில் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால்).
Eng இல் மதிப்பெண்களைக் குறிக்கும் மதிப்பெண் தாள் (mark sheet indicating marks in Eng)
வயதுத் தகுதி விவரம் : 29 டிசம்பர் 1999 - 29 ஜூன் 2005 இடையே பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்..
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் : (Agneepath Recruitment 2022)
அறிவிப்பு வெளியான தேதி | 20/06/2022 |
விண்ணப்பிக்க பதிவு செய்ய ஆரம்ப தேதி | 24/06/2022 |
பதிவு செய்ய இறுதித் தேதி | 05/07/2022 (நினைவில் கொள்ளுங்கள் நாளையே இறுதி நாள்) |
இரண்டாம் கட்டத்திற்கான அழைப்பு கடிதம் | ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி |
இரண்டாம் கட்ட நடத்தை தேதி | 21 ஆகஸ்ட் - 28 ஆகஸ்ட் |
மருத்துவம் | ஆகஸ்ட் 29ம் தேதி - 08 ம் தேதி நவம்பர் |
அக்னிபாத் (Agneepath Recruitment 2022) சம்பள விவரம் :
ஆண்டுகள் | சம்பள விவரம் |
முதலாம் ஆண்டு (1st Year) | 30,000/- |
இரண்டாம் ஆண்டு (2nd Year) | 33,000/- |
மூன்றாம் ஆண்டு (3rd Year) | 36,500/- |
நான்காம் ஆண்டு (4th Year) | 40,000/ |
இந்த சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்பட்டு சேவா நிதியாக பணி நிறைவின் போது ஒவ்வொரு வீரர்களுக்கும் தலா ரூ. 10.04 லட்சம் வரிப்பிடித்தமின்றி வழங்கப்படும்.
மேலும் 4 ஆண்டு ராணுவ பணி முடித்து வெளிவரும் அக்னி வீரர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தரப்படும் என , மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார் , ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா , பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா , அப்பல்லோ மருத்துவமனை, டிவிஎஸ் குழும நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் இத்திட்டத்தில் இருந்து 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியேறும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவு மற்றும் பதிவு : (Agneepath Recruitment 2022)
தற்காலிக தேர்வு பட்டியல் | 01 டிசம்பர் |
பதிவு பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் | 11 டிசம்பர் |
பதிவு காலம் 22 டிசம்பர் முதல் | 29 டிசம்பர் வரை |
பாடத் தொடக்கம் | 30 டிசம்பர் |
விமானப்படைக்கான இணையதள முகவரி
https://careerindianairforce.cdac.in/
இந்த லிங்கில் சென்று காணவும்.
அறிவிப்பு விவரம்
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU.pdf
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, Central government, Job Vacancy