ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அக்டோபரில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக உயர்வு!

அக்டோபரில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக உயர்வு!

மாதிரி படம்

மாதிரி படம்

வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் அதே வேளையில், நாட்டில் உள்ள உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் ஊழியர்களை நியமனம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளன.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பருவ பயிர்களின் அறுவடை முடிந்துள்ளதால் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை ஒரே அடியாக குறைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த அக்டோபர் மாதத்தில் 7.7 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.

  அக்டோபருக்கு முந்தைய மாதத்தில் வேலையில்லா திண்டாட்ட சதவீதம் வெகுவாகக் குறைந்திருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் பழைய நிலை திரும்பியுள்ளது. நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.43 சதவீதமாக குறைந்திருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் மீண்டும் உயர்ந்து விட்டது.

  செப்டம்பர் மாதத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை 5.84 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் இது 8.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம், 7.21 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  அறுவடைப் பணிகள் காரணம்

  கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளதற்கு, அறுவடைப் பணிகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. காரீஃப் பருவ பயிர்கள் அனைத்தும், தற்போதைய மழைக்காலத்தின் தொடக்க காலமான செப்டம்பரிலும், அக்டோபர் மாத மத்தியிலும் அறுவடை செய்யப்பட்டு விட்டன. இதனால், குறைந்திருந்த கிராமப்புற வேலைவாய்ப்புகள், நவம்பர் மாதத்தில் மழைக்கால பயிர்களின் விதைப்பு தொடங்கியவுடன் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதாவது, அக்டோபர் மாதத்தில் 7.91 சதவீதமாக இருந்த கிராமப்புற வேலைவாய்ப்பின்மை தற்போது 6.41 சதவீதமாக குறைந்துள்ளது.

  ஊழியர்களை அதிகரிக்க நிறுவனங்கள் திட்டம்

  வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் அதே வேளையில், நாட்டில் உள்ள உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் ஊழியர்களை நியமனம் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளன. அதாவது, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 57 சதவீத தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளன.

  Also Read : அக்னிபாத் திட்டம் : இந்திய விமானப்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

  ஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டாவது காலாண்டில் வேலைவாய்ப்புகள் 61 சதவீதம் அதிகரித்துள்ளன. அதுவே 3ஆவது காலாண்டில் 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இனி வரக் கூடிய காலாண்டுகளில் இதனை 70 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  அதே சமயம் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த அக்டோபர் மாதத்தில் உற்பத்தி சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று எஸ்&பி இந்தியா உற்பத்தி குறியீடு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

  ஈபிஎஃப்ஓ பயனாளர்கள் அதிகரிப்பு

  ஈபிஎஃப்ஓ திட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 1.69 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இது ஓராண்டுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது 14.4 சதவீதம் அதிகமாகும். இதில், 0.99 மில்லியன் வாடிக்கையாளர்கள் முதல்முறையாக ஈபிஎஃப்ஓ திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 58.32 சதவீதம் பேர் 18 முதல் 25 வயது வரையுள்ள இளைஞர்கள் ஆவர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Employment, Job