இந்திய தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் 38, 926 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு கடந்த மாதம் 02/05/2022ம் தேதி வெளியானது. இந்த வேலைக்கு ஆண், பெண் , திருநங்கைகள் என அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியான நிலையில் தமிழ்நாட்டில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பிக்கும் நபர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தேர்வு கிடையாது. தபால் அலுவலர் (BPM) , உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பதவிகள் உள்ளது. இந்த பணிகளுக்கு தற்போது தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர்.
இதற்க்கு விண்ணப்பித்திருந்த நபர்கள் இந்திய அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ பக்கத்தில் சென்று உங்கள் பதிவு செய்யப்பட்ட எண் மற்றும் பெயர் உள்ளனவா என பார்த்துக்கொள்ளவும். பெரும்பாலும் அடுத்த கட்டமாக இப்பணிகளுக்கு சான்றிதழ் சார்பார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மொபைல் போன் மற்றும் ஈமெயில் ஐடிக்கு குறுஞ்செய்தி வந்திருக்கும்.
தமிழகம் மற்றும் நம் நாட்டின் பிற மாநிலங்களில் இப்பணிக்கான ரிசல்ட் அறிவிப்பு முழுமையாக வெளியாகி உள்ளது .விண்ணப்பித்த நபர்கள் தகுதியும் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருப்பர். அதனை
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பத் தாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு இல்லை.
10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு GDS Result எப்படி பார்ப்பது ?
படி 1-
https://www.indiapost.gov.in/ இந்திய தபால் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
படி 2- முகப்புப் பக்கத்தில், அனைத்து மாநிலங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
படி 3- Tamil Nadu Postal Circle கிளிக் செய்யவும்.
படி 4 - Tamil Nadu GDS Result PDF கிளிக் செய்யவும்.
படி 5- ஆவணச் சரிபார்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் எண்களில் உங்கள் எண் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.