இந்திய தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் 38, 926 பணிகள்.... பெண்களும் விண்ணப்பிக்கலாம் - இன்றே கடைசி நாள்
இந்திய தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் 38, 926 பணிகள்.... பெண்களும் விண்ணப்பிக்கலாம் - இன்றே கடைசி நாள்
இந்திய தபால் துறை
India Post GDS Recruitment 2022 | விண்ணப்பிக்கும் நபர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தேர்வு கிடையாது. தபால் அலுவலர் (BPM) , உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பதவிகள் உள்ளது.
இந்திய தபால் துறையில் கொட்டிக்கிடக்கும் 38, 926 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு கடந்த மாதம் 02/05/2022ம் தேதி வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்று இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க இன்றைக்குள் காலஅவகாசம் நிறைவடைய உள்ளது. ஆண், பெண் , திருநங்கைகள் என அனைவரும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவரவருக்கு ஏற்றார் போன்று பணிகளை பதிவு செய்யும் போது தேர்ந்தெடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தேர்வு கிடையாது. தபால் அலுவலர் (BPM) , உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) ஆகிய பணிகளுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 4,310 பதவிகள் உள்ளது.
இந்தியாவில் 23 மாநிலங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. உங்கள் பகுதியில் உள்ள தபால் நிலையத்தை தேர்வு செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பணிகள்
தபால் அலுவலர் (BPM) , உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak)
விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான தேதி
02/05/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி
( 05/06/2022 ) இன்றைய தினம் இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம்
தபால் அலுவலர் (BPM)
ரூ.12,000
உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak)
ரூ.10,000
கல்வித் தகுதி விவரம்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது தகுதி
விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
மொத்த காலிப்பணியிட விவரம்
மொத்தம் இந்தியா முழுவதும் 38,926 காலியிடங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பதவிகள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பத் தாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு இல்லை.
10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்
ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பெண்கள் , மாற்றுத் திறனாளிகள்/ திருநங்கைகள் /SC/ST கட்டணம் கிடையாது.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட மாநிலங்கள்
இந்திய தபால் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்யுங்கள். நன்றாக படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.