இந்திய தபால் துறையில் காலியாக உள்ள 38, 926 பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான Gramin Dak Sevak பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் 38, 926 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ள இந்திய தபால் துறை தமிழகத்தில் மட்டும் 4,310 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு இந்த மாதம் 2ம் தேதி வெளியானது. இந்திய தபால் துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அடுத்தமாதம் 05.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்கான கல்வித் தகுதி , எப்படி விண்ணப்பிக்க வேண்டும், வயது , காலியிடங்கள் விவரம் உள்ளிட்டவற்றை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://indiapostgdsonline.gov.in. என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய தபால் துறை வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | No.17-31/2016-GDS | ||||
நிறுவனம் / துறை | இந்திய தபால் துறை | ||||
பணியிட விவரம் | விண்ணப்பிக்கும் நபர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம். | ||||
பணிகள் | Gramin Dak Sevak | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 02/05/2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05/06/2022 | ||||
சம்பள விவரம் |
| ||||
கல்வித் தகுதி விவரம் | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். | ||||
பிற தகுதிகள் | உள்ளூர் மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். | ||||
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. | ||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 38, 926 காலியிடங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 காலியிடங்கள் உள்ளது. | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். | ||||
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். | ||||
விண்ணப்ப கட்டணம் | அனைவரும் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். | ||||
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை | ஆன்லைன் online வழிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம். |
India Post GDS Jobs 2022 வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://indiapostgdsonline.gov.in/
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India post, Job Vacancy