முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை : நேர்காணல் மூலம் நியமனம்

சென்னை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வேலை : நேர்காணல் மூலம் நியமனம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

சுய தொழில் செய்வோர் / வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள் ஆகியோர் இந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Direct Agents for sale of Postal Life Insurance/Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களை சென்னை அண்ணாசாலை, தலைமை அஞ்சல் அலுவலகம்  ஈடுபடுத்தவிருக்கிறது.  விருப்பமுள்ளவர்கள்  30.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்வோர் / வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் மேற்கண்ட வயது மற்றும் தகுதி உடைய எந்த நபரும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

விரும்பத்தக்க தகுதிகள்:

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள்;கணினிப் பயிற்சி உள்ளவர்கள்;

சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள்;

சென்னை மாநகராட்சி பகுதியில் வசிப்பவர். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், சுய விவரக்குறிப்பு, வயதுச்சான்று, கல்விச்சான்று மற்றும் அனுபவங்கள் ஏதேனும் இருப்பின் அனுபவச்சான்று ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நாளில் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:   தலைமை அஞ்சல் அதிகாரி, அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகம், சென்னை-600 002

நாள்: 30.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு

இந்த தகவலை சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சலகத்தின் தலைமை அதிகாரி  என் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கTNPSC RESULTS: குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட்நியூஸ் ; கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு

First published:

Tags: Central Government Jobs, Jobs