ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

1,535 காலியிடங்கள் : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு

1,535 காலியிடங்கள் : இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

IOCL : காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிட்டர், பாய்லர், அப்பிரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர்  உள்ளிட்ட பல்வேறு பணி நிலையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சியாளர்களை (Technical Apprentice) ஈடுபடுவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  INDIAN OIL CORPORATION LIMITED) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 1535

ஐஓசிஎல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் போங்கைகான், குவஹாத்தி, பாரதீப், பானிபட் உள்ளிட்ட சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

முக்கியமான நாட்கள்:

அறிவிப்பு வெளியான நாள்: 2022, 24 செப்டம்பர்

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:  06-11-2022 (தோராயமானது)

சாண்றிதழ் சரிபார்ப்பு : 28-11-2022 to 07-12-2022 தோராயமானாது

தெரிவு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வில்    பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பயிற்சி காலம் :  தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்( மெக்கானிக்கல்)  பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா எண்ட்ரி ஆப்பிரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள்.

விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் வாசிக்கஓஎன்ஜிசி நிறுவனத்தில் 871 பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் நியமனம்

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  ஆள் சேர்க்கை அறிவிப்பில் தெளிவாக்க் கொடுக்கப்பட்டுள்ளன.

https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

First published:

Tags: IOCL, Recruitment