Home /News /employment /

ராணுவத்தில் ஒப்பந்த முறை... அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது மத்திய மரசு

ராணுவத்தில் ஒப்பந்த முறை... அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது மத்திய மரசு

அக்னிபாத்

அக்னிபாத்

AGNIPATH: பாதுகாப்புத் துறை வீரர்களின் நியமனங்களில் 25%  ஒப்பந்த முறையில் நியமிக்க இத்திட்டம் வழி கோருகிறது.

    பாதுகாப்பு படை நியமனங்களுக்கான புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பாதுகாப்புத் துறை வீரர்களின் நியமனங்களில் 25%  ஒப்பந்த முறையில் நியமிக்க இத்திட்டம் வழி கோருகிறது.

    முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்னிபாத் என்ற 'தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறை'மூலம் இந்திய பாதுகாப்புத் துறையில் வீரர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

     



    இந்த திட்டத்தின் கீழ், ராணுவம், கப்பல்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும்    நான்காண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அக்னீவீரர்கள்  நியமிக்கப்படுவார்கள். 17 1/2 முதல் 21 வயது வரையுள்ள விண்ணப்பித்தார்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணி ஒப்பந்த காலத்திற்குப் பிறகு, அக்னிவீரர்களில் 25% பேர் வழக்கமான பதவிகளுக்குக் (regular Cadre) கீழ் கொண்டுவரப்படுவார்கள். இதர வீரர்கள், ரூ.10 லட்சம் பெருந்தொகையுடன் பணியில் இருந்து  விடுவிக்கப்படுவார்கள்.

    சம்பளம்: முதலாவது ஆண்டில், மாதம் ஒன்றுக்கு தோராயமாக  ரூ. 30,000 வழங்கப்படும். நான்காவது ஆண்டில் ரூ. 40,000 வரை அதிகரித்து வழங்கப்படும். ரேஷன், உணவு, மருத்துவம் மற்றும் கேன்டின் போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Rajnath singh

    அடுத்த செய்தி