பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக நிரப்பப்படும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிகமாக நியமனங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது.
பொதுத் தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், தொடக்கப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை (எண்ணும் எழுத்தும் என்ற திட்டம்) வலுப்படுத்தும் விதமாகவும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர்கள்/ மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை எட்டு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனங்கள் மேற்கொள்வதற்கும், பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப சில காலம் ஆகக்கூடும் என்பதால் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது.
இதையும் வாசிக்க: சைனிக் பள்ளிகளில் 2-ம் சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் தொடக்கம்
பள்ளி மேலாண்மை வாயிலாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்க மாதம் ரூ.12,000 மதிப்பூதியம் வழங்கப்படும்.
இருப்பினும், இந்த எட்டு மாதத்திற்குள் பதவி உயர்வு மூலமாகவோ, நேரடி நியமனம் மூலமாகவோ, பணி மாறுதல் மூலமாகவோ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், பள்ளி மேலாண்மை குழு மூலம் அந்தந்த பள்ளிகளில் நிரப்பப்பட ஆசிரியர்கள் உடனடியாக பணி விடுப்பு செய்யப்படுவார்கள்.
இதையும் வாசிக்க: 10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு
இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை:
பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டும். அவ்வாறே, முதுகலை ஆசிரியர்கள் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேவி கல்வி பணிபுரியும் தகுதிவாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School Teacher