ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

2381 சிறப்பாசிரியர்கள் நியமனம்: இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு அடித்த ஜாக்பாட்

2381 சிறப்பாசிரியர்கள் நியமனம்: இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு அடித்த ஜாக்பாட்

காட்சிப் படம்

காட்சிப் படம்

2381 Temporary Teachers Recruitment: பயிற்சி நிறைவிற்கு பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கலாம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மூன்று வயது முதல் ஆறு வயது வரையான மழலையர் கல்விக்காக 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பானஅரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  முன்னதாக, தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று  வந்தது. 1 முதல் 5 வகுப்புகளுக்கான இடைநிலை  ஆசிரியாயர்கள்  L.K.G., U.K.G., வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். 

  இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் 1 முதல் 5ம்  வகுப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், தொடக்க வகுப்புகளில்  ஆசிரியர்கள் பற்றாக்குறை உருவானது. இதன்காரணமாக, அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் U.K.G வகுப்புகளை நிறுத்துவதாக தமிழக அரசு  அறிவித்தது.

  ஆனால், இத்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்தனர். வறுமை நிலையில் உள்ள சிறார்கள் பெரும் பின்னடைவுகளை  சந்திக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதனையடுத்து, தமிழக அரசு தனது  அறிவிப்பை திரும்ப பெற்றது.

  மேலும், LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் கற்றல்- கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2381 சிறப்பு ஆசிரியர்கள் நிரப்படுவார்கள் என்றும்  தெரிவித்தது. இன்று, தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான செயல்முறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

  தற்காலிக ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படும் முறை: 

  இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம்.

  இத்தற்காலிக சிறப்பரசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜுன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.

  தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு L.K.G மற்றும் U.K.G வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியுடன் இணைந்து வழங்கிடவும், பயிற்சி நிறைவிற்கு பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதி வழங்கலாம் என்ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:  எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: வெளியானது அரசாணை!

  இல்லம் தேடிக் கல்வித் திட்டம்: இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், மாநிலத்தின் ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் கற்றல் திறன்களைப் பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட 1.60 லட்சம் தன்னார்வலர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்துள்ளனர். மாதத்தில் குறைந்தது 20 நாட்கள்  வருகைப் பதிவு செய்துள்ள தன்னார்வலர்களுக்கு  ஊக்கத்  தொகை தரப்பட்டு வருகிறது.

  முன்னதாக, இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் இடைவெளி பெரிதும் குறைக்கப்பட்டுதாகவும், மிக துடிப்பான இந்த திட்டத்தை நாட்டின் ஏனைய மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பன்னாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். எனவே, இல்லம்  இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்க அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், பிழைப்பு ஊதியமாக வழங்கப்படும் ரூ.5000 மிகக் குறைவாக உள்ளது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Govt teachers, Illam Thedi Kalvi, Recruitment