IIT, IIM-களில் காலியாக உள்ள பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் உத்தரவின் பேரில், நாடு முழுவதும் உள்ள IIT, IIM-கள் காலியிடங்கள் நிரப்படவுள்ளது. EWS, OBC NCL, SC, ST பிரிவைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கான உதவிப் பேராசிரியர், பணியாளர் பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஐ.ஐ.டி., திருச்சி ஐ.ஐ.எம்., பிலாய் ஐ.ஐ.டி. உள்ளிட்டவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
OBC, SC, ST பிரிவில் பல ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது விவாதப் பொருளாக மாறிய நிலையில் தற்போது இப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IIM காலிப்பணி இடங்கள் :
Faculty Positions : Professor , Associate Professor , Assistant Professor ,
Non Faculty Positions : Corporate Relations Officer , It support Engineer , NetWork & Security , It Techinical Assistant , Junior Enjineer , Hindi Supervisor , Library & Information Assistant , Editorial Assistant , AcademicAssicuate
விண்ணப்பிக்க கடைசி தேதி :
IIT அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க
02.12.2021ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
IIM அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க
24.10.2021ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யில் சேர
https://facapp.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
திருச்சி ஐ.ஐ.எம்.-ல் சேர
www.iimtrichy.ac.in/careers தளத்தில் வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.