ஐஐடி டெல்லியில் 103 பேருக்கு வேலை!

தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

news18
Updated: December 4, 2018, 6:29 PM IST
ஐஐடி டெல்லியில் 103 பேருக்கு வேலை!
ஐஐடி டெல்லியில் வேலைவாய்ப்பு
news18
Updated: December 4, 2018, 6:29 PM IST
நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுள் டெல்லியிலுள்ள ஐஐடிக்கு முக்கியமான இடமுண்டு. இக்கல்வி நிறுவனத்தில் சீனியர் லேபரட்டரி அசிஸ்டென்ட் (Senior Laboratory Assistant) பணிக்கு 103 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கணிதவியல், வேதியியல், சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங், சென்ட்ரல் வொர்க்‌ஷாப் உள்ளிட்ட 27 துறைகள்/மையங்களில் இந்த 103 பணியிடங்கள் அமைந்துள்ளன. தகுதி வாய்ந்தவர்கள் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர், எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: துறை ரீதியாக பி.இ.,/ பி.டெக் அல்லது எம்.இ. அல்லது டிப்ளமா என்ஜியரிங் அல்லது பி.எஸ்.சி./ எம்.எஸ்.சி. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த பணிக்கு தேவைப்படும் கல்வித் தகுதி குறித்து வலைதளத்தில் பார்க்கவும்.

தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 200-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி, பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10. மேலும் விவரங்களுக்கு www.iitd.ac.in, http://www.iitd.ac.in/sites/default/files/jobs/non_acad/Advt-E-II242018DR-Eng.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Loading...

Also watch

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...