முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டெல்லி விமான சேவை நிறுவனத்தில்1,095 காலியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

டெல்லி விமான சேவை நிறுவனத்தில்1,095 காலியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

மாதிரி படம்

மாதிரி படம்

10/12 ஆம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயதுடைய வேலைவாய்ப்பு அற்றோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • Last Updated :

டெல்லி IGI ஏவியேஷன் சர்விஸ்  தனியார் நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை முகவர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கல்வித் வாரியத்தில் 10/12 ஆம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயதுடைய வேலைவாய்ப்பு அற்றோர் / வேலைவாய்ப்பித்த தேடும் இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: 15000 முதல் ரூ. 25,000 வரை

 காலியிடங்கள் : `1,095  

தற்போது, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மே மாதம்  22ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவுமுறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

எழுத்து தேர்வு:

பொது அறிவு, ஆங்கில மொழியறிவு, திறனறிவு, சிவில் விமானத்துறை அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள், தங்களது கல்விச் சான்றிதழ், வயது மற்றும் முகவரிக்கான ஆதாரங்களுடன் www.igiaviationdelhi.com என்ற இணையதளத்தின் வாயிலாகவிண்ணப்பிக்கலாம் .  விண்ணப்பபங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும்.

சென்னை,மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் தேர்வு மைய ங்கள் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    தேர்வு தொடர்பான தகவல்களை https://igiaviationdelhi.com/wp-content/uploads/2022/04/IGI-english.pdf  என்னும் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பெறலாம்.

    First published:

    Tags: Jobs