எல்.ஐ.சியின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐடிபிஐ வங்கி, நிர்வாகம் (Executive Post) மற்றும் கிரேடு ‘ஏ’ உதவி மேலாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 1,544
நிர்வாகப் பணி (Executive Post) - 1,044
உதவி மேலாளர் - 500
நிர்வாகப் பணி விபரங்கள்:
முக்கியமான நாட்கள்:
ஜூன் 3 முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஓராண்டுகாலத்துக்குப் பிறகு, விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையிலும், பிற அவசியங்கள் கருதியும் பணி காலம் அதிகபட்சமாக ஈராண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மூன்றாண்டு காலத்தை வெற்றிகரமாக முடித்தவர்கள் உதவி மேலாளர் கிரேடு ஏ பதவிக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: முதலாவது ஆண்டில் மாத ஊதியமாக ரூ 29,000 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் ரூ. 31,000-ம், மூன்றாம் ஆண்டில் ரூ. 34,000ம் மாத ஊதியமாக வழங்கப்படும்.
உதவி மேலாளர் - 500
பெங்களூரில் இயங்கும் மணிப்பால் கல்வி சேவைகள் பிரைவேட் லிமிடெட் , கிரேட்டர் நொய்டாவில் Nitte ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஐடிபிஐ வங்கி, வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில் 1 ஆண்டு முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்பை வழங்கி வருகிறது. 9 மாதங்கள் பாடக்கல்வி வாயிலாகவும், 3 மாதங்கள் பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்.
இந்த முதுகலை படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள், அவசியங்கள் அடிப்படையில் உதவி மேலாளர் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் (Admissions to IDBI Bank PGDBF 2022-23 for absorption as Assistant Manager)
காலியடங்கள்: 500
முக்கியமான நாட்கள்: ஜூன் 3 முதல் 23ம் தேதி வரை இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Recruitment of Executives (On Contract) & Admissions to IDBI Bank PGDBF – 2022-23
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banking jobs