IDBI பேங்க் SO வேலைவாய்ப்பு.. 134 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு..

IDBI பேங்க் SO வேலைவாய்ப்பு.. 134 காலிப் பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியீடு..

மாதிரிப்படம்

ஆன்லைன் ரிஜிஸ்டரேஷன் 2020 டிசம்பர் 24 வியாழக்கிழமை (அதாவது இன்று) தொடங்கும். ரிஜிஸ்டரேஷன் தொடங்கிய பிறகு, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2021 ஜனவரி 7 அல்லது அதற்கு முன்னர் idbibank.inல் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
IDBI வங்கியில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Specialist Cadre Officers (DGM (Grade D), AGM (Grade C), Manager ( Grade B), Assistant Manager (Grade A)) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.  இந்திய தொழில்துறை மேம்பாட்டு வங்கி சிறப்பு அதிகாரிகளை (Specialist officers) ஆட்சேர்ப்பு (recruitment) செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வங்கி வெளியிட்டுள்ளது. 

ஆன்லைன் ரிஜிஸ்டரேஷன் 2020 டிசம்பர் 24 வியாழக்கிழமை (அதாவது இன்று) தொடங்கும். ரிஜிஸ்டரேஷன் தொடங்கிய பிறகு, ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2021 ஜனவரி 7 அல்லது அதற்கு முன்னர் idbibank.inல் ஆன்லைனில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். 134 காலிப்பணியிடங்களை நிரப்ப  ரிக்குரூட்மென்ட் டிரைவ் (recruitment drive) நடத்தப்பட்டு வருகிறது, அவற்றில் 62 காலிப்பணியிடங்கள், மேனேஜர் (கிரேடு B), 52 AGM (கிரேடு C), 11 DGM (கிரேடு D), மற்றும் 9 அசிஸ்டன்ட் மேனேஜர் (கிரேடு A) பதவிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி தகுதி (Educational qualification) : 

அசிஸ்டன்ட் மேனேஜர் (AM) (கிரேடு A):  தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மோசடி இடர் மேலாண்மை (எஃப்ஆர்எம்) அல்லது சைபர் கிரைம் (Fraud Risk Management (FRM) or Cyber Crime) தொடர்பான தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  

மேனேஜர் (கிரேடு B):  தேர்வர்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு / கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு  (B.E./B.Tech) in Electronics & Electrical/Electronics & Telecommunications/Computer Science/Information Technology/Electronics & Communication) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MCAல் முதுகலை பட்டப்படிப்பில் (Graduate with Post Graduation in MCA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DGM (கிரேடு D):  தேர்வர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (recognized university) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டதாரி ஆக இருக்க வேண்டும்.

AGM (கிரேடு C):  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு / கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் மின் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தொடர்பு அல்லது MCAல் முதுகலை பட்டப்படிப்பை (Electronics and Telecommunications/Computer Science/Electronics and Electrical/Information Technology/Electronics & Communication OR Graduate with Post Graduation (PG) in MCA)  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (recognized university) இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

SO ஊதிய விவரம் : பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 23,700/- முதல் அதிகபட்சம் ரூ. 59,170/- வரை ஊதியம் வழங்கப்படும்.

Also read... SBI PO அட்மிட் கார்டு 2020 வெளியானது - எப்படி டவுன்லோட் செய்வது?

IDBI தேர்வு செயல்முறை : விண்ணப்பதாரர்கள் Group Discussion (GD) / Personal Interview (PI) மூலமாகவும் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.  

SO விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-

SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-

மேலும் விவரங்களுக்கு, தேர்வர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.asp படித்து தெளிவு பெறலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: