ஐடிபிஐ வங்கியில், அதிகாரி பணியிடங்கள் (ஒப்பந்த அடிப்படை) மற்றும் துணை மேலாளர் பணியிடங்கள் நாடு முழுவதிலும் காலியாக உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்கள், இந்தப் பணியிடங்களுக்கு ஜூன் 17ஆம் தேதி வரையில் https://www.idbibank.in/ என்ற முகவரியில் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
அதிகாரி பணியிடத்திற்கு நேரடி பணிநியமன நடைமுறை கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. ஆனால், துணை மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், பெங்களூரில் உள்ள மணிபால் குளோபல் கல்வி சேவை தனியார் லிமிடெட் மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிட்டே கல்வி சர்வதேச தனியார் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கும் ஓராண்டு வங்கி மற்றும் நிதி சேவைகளுக்கான டிப்ளமோ கல்வியில் அட்மிஷன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஓராண்டு கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், விண்ணப்பதாரர்கள் ஐடிபிஐ வங்கியில் கிரேட் ஏ-வுக்கு நிகரான பணி நியமனம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நியமனம் தொடர்பான கூடுதல் தகவல்களை
https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
எந்த பணியில் எவ்வளவு காலியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் அதிகாரி நிலையில் 1,044 பணியிடங்கள் காலியாக உள்ளன. துணை மேலாளர் நிலையில் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகாரி நிலையில் உள்ள பணியிடங்களில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி 20 ஆகும். அதிகபட்ச வயது தகுதி 25 ஆகும். துணை மேலாளர் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 28 வயது கொண்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி கணக்கீடு செய்யப்படும்.
Also Read : மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
ஒரு பணியிடத்துக்கு மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்
அதிகாரி பணியிடம் அல்லது துணை மேலாளர் பணியிடம் என ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே ஒரு சமயத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் அது திருப்பி தரப்பட மாட்டாது என்றும் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
பணி நியமன முறைகளில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம் மற்றும் பழங்குடியினர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு: 40 லட்சம் வேலைகள் உருவாகும்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த காலத்தில் ஐடிபிஐ வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது துறையிலும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், ஒப்பந்த பணியாளர்கள் என்பதால் அவர்களுக்கு டிஏ, ஹெச்ஆர்ஏ போன்ற படிகள் வழங்கப்பட மாட்டாது என்றும் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.