Home /News /employment /

இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை...10ம் வகுப்பு போதும் - விவரம்

இந்தியக் கடலோரக் காவல்படையில் வேலை...10ம் வகுப்பு போதும் - விவரம்

வேலை

வேலை

ICG Recruitment 2022 : விண்ணப்பிக்க அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்திய கடலோர காவல்படை நாவிக், யான்ட்ரிக் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்திய கடலோரக் காவல்படை வேலையை தேடும் விண்ணப்பதாரர்கள் மற்றும் 10வது, 12வது , டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு சமமான தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    மேலும் வேலைக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / அமைப்பின் பெயர்இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard )
    பதவிகளின் பெயர்Navik, Yantrik
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை300
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதிசெப்டம்பர் மாதம் 8ம் தேதி முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிசெப்டம்பர் மாதம் 22ம் தேதி வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    பணியிடம்இந்தியா முழுவதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்ரூ. 21700-29200/-
    கல்வித் தகுதி10வது, 12வது , டிப்ளமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/ வாரியத்திலிருந்து அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
    வயது விவரம்குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள் , விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு : 22 ஆண்டுகள்
    அதிகாரப்பூர்வ தளம் https://joinindiancoastguard.gov.in
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பத்தாரர்கள் ரூ.250/-விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    Gen/OBC/EWS ஆண் விண்ணப்பத் தாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    இந்திய கடலோர காவல்படை வேலைகள் 2022க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான படி

    படி 1: முதலில், முழு ICG அறிவிப்பையும் கவனமாகப் படியுங்கள்!

    படி 2 : ICGயின் அதிகாரப்பூர்வ https://joinindiancoastguard.gov.in இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

    படி 3 : தொழில்/ஆட்சேர்ப்பு பக்கத்தை கிளிக் செய்யவும்

    படி 4 : உள்நுழைவு/புதிய பதிவு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

    படி 5 : வேலைப் படிவத்தில் விண்ணப்பதாரர் தங்கள் அசல் ஆவணங்களுடன் பொருந்திய விவரங்களை நிரப்ப வேண்டும்

    படி 6 : பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றவும்

    படி 7 : தேவை எனில் கட்டணங்களைச் செலுத்தவும்

    படி 8 : அவ்வளவுதான், உங்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு அல்லது பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதிர்கால பயன்பாட்டிற்கு உதவும்.

    அறிவிப்பினை காண , விண்ணப்ப படிவத்தை காண

    https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT02-2022adv.pdf

    https://joinindiancoastguard.cdac.in/cgept/

    https://joinindiancoastguard.gov.in/

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி