Job Alert : ரூ.23,000 சம்பளத்தில் அரசு வேலை... தேர்வு கிடையாது - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலை

ஐ.சி.எஃப்.ஆர்.இ ( icfre) துறையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    ஐ.சி.எஃப்.ஆர்.இ என்பது இந்தியாவில் வனவியல் ஆராய்ச்சிக்குப் பொறுப்பான மிகப்பெரிய அமைப்பாகும். இந்தியாவில் வனவியல் துறையில் ஆராய்ச்சி மற்றும் கல்வியை இயக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் 1986ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் (இந்தியா) கீழ் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக பொது இயக்குநரும் தலைமையிடமாக தேராதூனும் உள்ளது. ஐ.சி.எஃப்.ஆர் 1991 முதல் ஒரு தன்னாட்சி சபையாக மாறியது.

    இதன் செயல்பாடுகளாக வனவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை இந்திய மாநிலங்களுக்கும் பிற நிறுவனங்களுக்குப் பயன்படுத்த மாற்றவும், மற்றும் வனவியல் கல்வியை வழங்குவது ஆகும். இக்குழுமத்தின் கீழ் 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 மேம்பட்ட மையங்கள் உள்ளன. இவை பல்வேறு உயிர்-புவியியல் பகுதிகளின் ஆராய்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

    இந்த மையங்கள் தேராதூன், சிம்லா, ராஞ்சி, ஜோர்ஹாட், ஜபல்பூர், ஜோத்பூர், பெங்களூர், கோவை, அலகாபாத், சிந்த்வாரா, ஐஸ்வால், ஹைதராபாத் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் உள்ளன. தற்போது இந்த துறையில் காலியாக உள்ள 18 இடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    ஐ.சி.எஃப்.ஆர்.இ வேலைக்கான முழு விவரம்

































     

    பணி
    Senior Project Fellow, Junior Project Fellow, Field Assistant, Project Assistant


     

    காலிப்பணியிடங்கள்
    18
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    வயது
    28-32
    நேர்காணல் தேதி 28.07.2021, 29.07.2021 & 30.07.2021
    சம்பள விவரம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம்


     

    கல்வி தகுதி
    அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ Master’s Degree தேர்ச்சி


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.icfre.org/recruitment


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.icfre.org/vacancy/vacancy500.pdf
    Published by:Sankaravadivoo G
    First published: