இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு (Indian Council of Forestry Research and Education) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம். இந்திய அரசின் இந்த நிறுவனம் தேராதூனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்பாடுகளாக வனவியல் ஆய்வுகளை மேற்கொள்வது, உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை இந்திய மாநிலங்களுக்கும் பிற பயனர் நிறுவனங்களுக்குப் பயன்படுத்த மாற்றவும், மற்றும் வனவியல் கல்வியை வழங்குவது ஆகும்.
இக்குழுமத்தின் கீழ் 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 4 மேம்பட்ட மையங்கள் உள்ளன. இவை பல்வேறு உயிர்-புவியியல் பகுதிகளின் ஆராய்ச்சி தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த மையங்கள் தேராதூன், சிம்லா, ராஞ்சி, ஜோர்ஹாட், ஜபல்பூர், ஜோத்பூர், பெங்களூர், கோவை, அலகாபாத், சிந்த்வாரா, ஐஸ்வால், ஹைதராபாத் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் உள்ளன. தற்போது இங்கு காலியாக உள்ள 48 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் 2 பணியிடங்களுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
ICFRE
விளம்பர எண்
No.32-20/2021-ICFRE
வேலையின் பெயர்
வனப்பாதுகாவலர், வன துணை பாதுகாவலர்
காலிப்பணி இடங்கள்
48
தமிழகத்தில் மட்டும் 2 பணியிடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை
Test/ Interview (தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
23.08. 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
10.10.2021
விண்ணப்ப முறை
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
ரூ.500/-
முகவரி
Secretary, Indian Council of Forestry Research and Eduction. P.O. New Forest, Dehradun – 248 006 (Uttarakhand)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.