• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை

  Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.10.2021.

  • Share this:
    இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory) அல்லது ஐ.சி.எஃப் (ICF) பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரயில்வே பயணிகளின் ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை உள்ளது.

    இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் இவை ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இங்கு காலியாக உள்ள Apprentice Posts பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 792 பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    வேலைக்கான விவரங்கள் :































































    விளம்பர எண் No. PB/RR/39/App
    நிறுவனம் ICF Chennai Recruitment 2021
    வேலையின் பெயர் Apprentice Posts
    காலிப்பணி இடங்கள் 792
    வேலை வகை

     

    Central Government
    பணியிடம் Chennai
    தேர்ந்தெடுக்கும் முறை Academic Qualification
    Interview
    வயது 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27.09.2021
    கல்வி தகுதி 10th/12th/ITI


     

    சம்பள விவரம்
     மாதம் ரூ.6000/-  To ரூ.7000/-
    விண்ணப்ப கட்டணம்

     

    SC/ST - No fees
    Others - ரூ.100/-
     விண்ணப்ப முறை   Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    இணையதள முகவரி https://pb.icf.gov.in/act/


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    26.10.2021

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://pb.icf.gov.in/act/notification.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை காலிப்பணியிட விவரம் : 





















































    பணிகளின் விவரம் அனுபவம் இல்லாதவர்கள்  (Freshers) அனுபவம் உள்ளவர்கள் (Ex-ITI)
    CARPENTER 31 50
    ELECTRICIAN 17 128
    FITTER 43 151
    MACHINIST 25 32
    PAINTER 34 49
    WELDER 50 172
    MLT Radiology 04 -
    MLTPathology 04 -
    PASAA - 02

    இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி ?

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: