Home /News /employment /

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை... ரூ.21700/- சம்பளம்

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை... ரூ.21700/- சம்பளம்


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

ICAR recruitment 2021 : இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (Indian Council of Agricultural Research – ICAR), இந்தியாவின் தலைநகரமான, புது தில்லியில் இயங்கி வரும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது இந்திய நடுவண் வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இயங்கிவருகிறது.

    இக்குழுமமானது வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப் பணிகளில் தலைச்சிறந்த அமைப்பாக இயங்கிவருகிறது. இதில் தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பின் கீழ் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்களும் நாடு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. இது உலகில் காணப்படும் மிகப்பெரிய தாயக வேளாண் அமைப்புகளுள் ஒன்றாகும்.

    தற்போது இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 641 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் Indian Agricultural Research Institute
    வேலையின் பெயர் Technician
    விளம்பர எண் 1-1/2022 Rectt Cell/ Technician
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 641 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 18-30 வயது உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறை Written Examination மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி Matriculation or Equivalent (10th)
    சம்பள விவரம் ரூ.21700/- சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2022
    விண்ணப்ப முறை Online
    விண்ணப்ப கட்டணம்

    GEN/OBC/EWSs ரூ.1000/-

    SC/ST/PwBDs/ExSM ரூ.300/-

    இணையதள முகவரி

    https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/74856/Instruction.html

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1116787619894642497155.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி