ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8000க்கும் மேற்பட்ட வங்கிப் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐபிபிஎஸ்

8000க்கும் மேற்பட்ட வங்கிப் பணி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐபிபிஎஸ்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 07, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

RRBs – CRP RRB-XI (Office Assistants) and CRP RRB-XI (Officers) : பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டுள்ளது .

மொத்த காலியிடங்கள்: 8106

முக்கியமான நாட்கள்: 

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் : ஜூன் 7

ஆன்லைனில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: ஜூன் 27

அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 07, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அலுவலர் நிலை 2 மற்றும் 3 பதவிகளுக்கான அடிப்படைத் தேர்வு செப்டம்பர் மாதம் 9ம் தேதி நடைபெற இருக்கிறது.

Recruitment of Officers (Scale-I, II & III) and Office Assistants (Multipurpose) in Regional Rural Banks (RRBs) - CRP RRBs XI

வயதுக்கான தகுதிகள்: 

அலுவலக உதவியாளர் (பல்துறை பணி) : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

அலுவலர் நிலை 1 (துணை மேலாளர்)- இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

அலுவலர் நிலை 2 (மேலாளர்) :  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 32-க்கு கீழும், 21-க்கு மேலும்  இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

அலுவலர் நிலை 3 (மூத்த மேலாளர்) :  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.06.2022 அன்று 40-க்கு கீழ்  இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

கல்வித் தகுதி: 

அலுவலக உதவியாளர்  பல்துறை பணிகளுக்கும் , அலுவலர் நிலை 1பணிகளுக்கும் ஏதேனும் துறைகளில் இளநிலை (Bachelor Degree) பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிலை 1 பதிவிகளுக்கு கால்நடை பராமரிப்பு, வேளாண், வேளாண் பொறியியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை :  எழுத்துத் தேர்வு பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.  பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை கொங்கனி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று 2019-ம் ஆண்டு அரசு முடிவெடுத்தது. அப்போதிலிருந்து பிராந்திய மொழிகளிலும் மேற்கண்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

First published:

Tags: Banking jobs