ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

IBPS Vacancies Updated: பிராந்திய ஊரக வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

IBPS Vacancies Updated: பிராந்திய ஊரக வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஊரக வங்கிகளில் உள்ள காலி பதவியிடங்களின் எண்ணிக்கையை 8285 ஆக ஐபிபிஎஸ் அதிகரித்துள்ளது .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பிராந்திய ஊரக வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கையை வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அதிகரித்துள்ளது.

  முன்னதாக, பிராந்திய ஊரக வங்கிகளில் குரூப் 'ஏ' அதிகாரிகள் (ஸ்கேல்-I, II & III) மற்றும் குரூப் 'பி' அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) ஆகிய பதவிகளுக்கான, காலியாக உள்ள 8,106 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை  வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) வெளியிட்டது.

  இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் ஜுன் 27 ஆகும். இந்நிலையில், பதவியிடங்களின் எண்ணிக்கையை 8285 ஆக ஐபிபிஎஸ் அதிகரித்துள்ளது . இந்த முடிவு, நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு பயனளிக்கும் என்று கருதப்படுகிறது.

  தகுதி: அதிகாரி அளவுகோல்- I (உதவி மேலாளர்) பதவிகளுக்கு, விண்ணப்பிக்க கூடியோர் 18 வயதுக்கு மேல் மற்றும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

  அளவுகோல்-II நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.

  அளவுகோல் III-க்கு விண்ணப்பிக்க கூடியவர்கள் குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். அலுவலக

  உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் உள்ளன. கல்வி தகுதியானது சம்பந்தப்பட்ட துறையில் UGC அங்கீகாரம் கொண்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க:  யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு: 11.52 லட்சம் பேரில் 13 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி

  தேர்வு தேதி:   அலுவலக உதவியாளர்களுக்கான IBPS RRB-இன் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்படும்.

  அதிகாரிகள் அளவுகோல் II மற்றும் III-க்கான ஒற்றை ஆன்லைன் தேர்வு செப்டம்பர் 24 அன்று நடைபெறும்.

  இறுதியில், அதிகாரிகள் அளவுகோல் I மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான முதன்மைத் தேர்வு என்பது முறையே செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

  அதிகாரிகளின் அளவு I, II மற்றும் III பதவிக்கான நேர்காணல் நவம்பர் 2022-இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதையும் வாசிக்க:  அடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு 

  எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

  “Click here to apply online for CRP RRBs-XI” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

  பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.

  எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

  விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD பிரிவைச் சேர்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 175 செலுத்த வேண்டும். இதை தவிர்த்து, மற்ற பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூன் 27-ஐ நிர்ணயித்துள்ளனர். எனவே அதற்கு முன்னர் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பித்து கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Banking jobs