1599 வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.26

இந்த 1599 பணியிடங்களில் ஐ.டி. ஆபீசர் பணிக்கு 219 இடங்களும், அக்ரிகல்சுரல் ஃபீல்டு ஆஃபிசர் பணிக்கு 853 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

1599 வங்கி சிறப்பு அதிகாரி பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.26
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 24, 2018, 9:11 PM IST
  • Share this:
பொதுத் துறை வங்கிகளில் 1599 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்) அமைப்பு நடத்த உள்ளது.

பிரிவுகள்: இந்த 1599 பணியிடங்களில் ஐ.டி. ஆபீசர் பணிக்கு 219 இடங்களும், அக்ரிகல்சுரல் ஃபீல்டு ஆஃபிசர் பணிக்கு 853 இடங்களும், ராஷ்டிராபாஷா அதிகாரி 69 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 75 இடங்களும், ஹெச்.ஆர். அதிகாரி பணிக்கு 81 இடங்களும், மார்கெட்டிங் அதிகாரி பணிக்கு 302 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-11-2018 நிலவரப்படி 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவனருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.


கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அந்தந்தப் பணிக்கான கல்வித் தகுதியை வலைதளத்தில் பார்க்கலாம்.

தேர்வுக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரும், ஊனமுற்றோரும் விண்ணப்பக் கட்டணமான ரூ. 100-ம், பிறர் ரூ. 600-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி:  விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 26. முதல்நிலை எழுத்துத் தேர்வு டிசம்பர் 29, 30 ஆகிய நாட்களிலும், முதன்மைத் தேர்வு 27-1-2019 அன்றும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.Also watch

First published: November 24, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading