வங்கி அதிகாரிகள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - தேர்வு நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரிந்துகொள்ளுங்கள்..

மாதிரிப்படம்

வங்கி அதிகாரிகள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  பொதுத் துறை வங்கிகளின் சிறப்பு அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) அறிவித்துள்ளது.

   

   

  நிறுவனம்


  வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் / Indian Institute of Banking Personnel Selection ( IBPS )

   


   

  பணி


  • ஐ.டி ஆபீசர் (ஸ்கேல் - 1) ( IT Officer )

  • விவசாய கள அதிகாரி (ஸ்கேல் - 1) (agriculture field officer )

  • ராஷ்டிரபாஷா அதிகாரி (ஸ்கேல் - 1) ( rajbasha adhikar)

  • சட்ட அதிகாரி (ஸ்கேல் - 1) ( law officer )

  • எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி (ஸ்கேல் - 1) ( Hr personal officer )

  • மார்க்கெட்டிங் அதிகாரி (ஸ்கேல் - 1) (Marketing offier )


  வயது வரம்பு

  20 முதல் 30 வயது

  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு
  தேர்வு செய்யும் முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்


   

  கல்வித்தகுதி:


  • ஐ.டி. அதிகாரி - கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் - இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய என்ஜினீயரிங் பிரிவு படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள்

  • விவசாய கள அதிகாரி - அக்ரி கல்சர், ஹார்ட்டிகல்சர், அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், டயரி சயின்ஸ், அக்ரி என்ஜினீயரிங், பிஸ்ஸரி சயின்ஸ், பிஸிகல்சர், அக்ரி மார்க்கெட்டிங் கோஆபரேசன், கோஆபரேசன் அன்ட் பேங்கிங், அக்ரோ பாரஸ்ட்ரி

  • ராஷ்டிரபாஷா அதிகாரி - இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம்

  • சட்ட அதிகாரி , மார்க்கெட்டிங் அதிகாரி ,எச்.ஆர்./பெர்சனல் அதிகாரி சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன.


  விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

  நாளிதழில் வெளியான அறிவிப்பு


  முக்கியத் தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 23.11.2020

  • வங்கி சிறப்பு அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு-1,163 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது

  • விண்ணப்பத்தை திருத்துவது, மாற்றியமைத்தல் தேதி : 23.11.2020

  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசித் தேதி 23.11.2020

  • ஆன்லைன் தேர்வு அழைப்பு கடிதங்களை பதிவிறக்குதல் தேதி : டிசம்பர் 2020

  • ஆன்லைன் முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் : 26.12.2020 , 27.12.20203

  • முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் : ஜனவரி 2021

  • ஆன்லைன் தேர்வு முக்கிய தேர்வு : 24.01.2021
   முக்கியத் தேர்வு முடிவுகள் : பிப்ரவரி 21

  • நேர்காணல் நடத்துதல் : பிப்ரவரி 21

  • தற்காலிக ஒதுக்கீடு : ஏப்ரல் 2021

  Published by:Sankaravadivoo G
  First published: