ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

IBPS, RRB ஆட்சேர்ப்பு 2022 : 8,106 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நெருங்கியது..

IBPS, RRB ஆட்சேர்ப்பு 2022 : 8,106 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நெருங்கியது..

வங்கி பணியாளர் தேர்வாணையம்

வங்கி பணியாளர் தேர்வாணையம்

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IPBS - Institute of Banking Personnel Selection) அறிவித்திருக்கும் ஆஃபிசர்கள் மற்றும் ஆஃபிஸ் அசிஸ்டன்ட் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ் இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஜூன் 27, 2022 அன்றுடன் முடிவடைய உள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IPBS - Institute of Banking Personnel Selection) அறிவித்திருக்கும் ஆஃபிசர்கள் மற்றும் ஆஃபிஸ் அசிஸ்டன்ட் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் (ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ்) இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஜூன் 27, 2022 அன்றுடன் முடிவடைய உள்ளது.

குரூப் 'ஏ'-ஆஃபிசர்ஸ் (ஸ்கேல் (I, II & III) மற்றும் குரூப் 'பி'- ஆஃபிஸ் அசிஸ்டன்ட் (மல்டிபர்ப்பஸ்) ஆட்சேர்ப்புக்கான RRB-களுக்கான (Regional Rural Banks) பொது ஆட்சேர்ப்பு செயல்முறைக்கான ஆன்லைன் தேர்வை வங்கி பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளது. வங்கி வேலைகளை தேடும் நபர்கள் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான ibps.in மூலம் கடந்த 7.06.2022 முதல் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி (27.06.2022) நெருங்கி இருக்கிறது.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான ibps.in-ற்கு சென்று காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப செயல்முறை ஜூன் 7-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மொத்தம் 8,106 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது தொடர்பான IBPS-ன் அதிகாரபூர்வ அறிவிப்பில், ஏதேனும் பிராந்திய கிராமப்புற வங்கிகளில் சேர விரும்பும் தகுதியுடைய எந்தவொரு விண்ணப்பதாரரும் குரூப் “ஏ”-ஆஃபிசர்ஸ் (ஸ்கேல்- I, II & III) மற்றும் குரூப் “பி”-ஆஃபிஸ் அசிஸ்டன்ட் (மல்டிபர்ப்பஸ்) என பட்டியலிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தற்போதைய இந்த பொது ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ரிஜிஸ்டர் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

IBPS, RRB ஆட்சேர்ப்பு செயல்முறை ப்ரிலிமினரி எக்ஸாம்/ மெயின் எக்ஸாம்/ இன்டர்வியூவை அடிப்படையாக கொண்டது. IBPS, RRB தேர்வுகள் இந்தியாவில் உள்ள பல சென்டர்கள் மூலம் ஆன்லைனில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் இரண்டு போஸ்ட்களுக்கும் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், தனித்தனி விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டும்.

காலிப்பணியிட விவரங்கள்:

ஆஃபிஸ் அசிஸ்டன்ட்ஸ்4483
ஆஃபிசர் ஸ்கேல் I2676
ஜென்ரல் பேங்கிங் ஆஃபிசர் ஸ்கேல் II745
ஐடி ஆஃபிசர் ஸ்கேல் II57
சிஏ ஸ்கேல் II19
லா ஆஃபிசர் II18
ட்ரெஷரி ஆஃபிசர் ஸ்கேல் II10
மார்க்கெட்டிங் ஆஃபிசர் ஸ்கேல் II6
அக்ரிகல்ச்சர் ஆஃபிசர் ஸ்கேல் II12
ஆஃபிசர் ஸ்கேல் III80

தகுதிக்கான அளவுகோல்:

ஆஃபிஸ் அசிஸ்டன்ட் (மல்டிபர்ப்பஸ்):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையானவற்றில் எந்த ஒரு துறையிலும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேலை எதிர்பார்க்கும் RRB-யால் பரிந்துரைக்கப்படும் உள்ளூர் மொழி புலமை, கூடுதலாக கணினிகளில் வேலை செய்யும் அறிவு பெற்றிருந்தால் நல்லது.

ஆஃபிசர் ஸ்கேல் II (அசிஸ்டன்ட் மேனேஜர்):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஆஃபிசர் ஸ்கேல் II ஜென்ரல் பேங்கிங் ஆஃபிசர் (மேனேஜர்):

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்குச் சமமான ஒன்றில் பயின்று குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணங்கள் :

ஆஃபிசர் ஸ்கேல் ( I, II & III):

* SC/ST/PWBD விண்ணப்பதார்களுக்கு ரூ.175

* மற்ற அனைவருக்கும் ரூ.850

ஆஃபிஸ் அசிஸ்டன்ட் (மல்டிபர்ப்பஸ்):

* SC/ST/PWBD/EXSM விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175

* மற்ற அனைவருக்கும் ரூ.850

ஆன்லைன் மோடில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.?

* அதிகாரப்பூர்வ வெப்சைட்டான “ibps.in”-க்கு விசிட் செய்து, ஹோம் பேஜில் இருக்கும் CRP- RRBs-X க்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.

* பின் அந்த அறிவிப்பை டவுன்லோட் செய்து கவனமாக படிக்கவும்.

* அதில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான விருப்பத்தை நீங்கள் காணலாம். அதில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும்.

* நீங்கள் பதிவு செய்துள்ள விவரங்களை ஒருமுறை மீண்டும் சரி பார்த்து இறுதியாக submit பட்டனை கிளிக் செய்யவும்.

First published:

Tags: Job Vacancy