• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • IBPS RRB-ல் 10293 காலிப்பணியிடங்கள் - ஜூன் 8 முதல் விண்ணப்பிக்கலாம்!

IBPS RRB-ல் 10293 காலிப்பணியிடங்கள் - ஜூன் 8 முதல் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் வங்கிகளில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1,2 மற்றும் 3 ஆகிய பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

  • Share this:
வங்கிப் பணியாளர் தேர்வாணையமான IBPS, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளில் (RRB) உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதால், காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை தேர்வு முகமைகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் நாடு முழுவதும் வங்கிகளில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், கிளார்க், ஆபிசர்ஸ் கிரேடு 1,2 மற்றும் 3 ஆகிய பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 10,293 பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ibps.in. என்ற இணையதளத்துக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

IBPS RRB தேர்வுக்கான தகுதி (ஜூன் 1, 2021 நிலவரப்படி)

1. ஆபிசர் ஸ்கேல் III (சீனியர் மேனேஜர்) - 21 - 40 வயது
2. ஆபிசர் ஸ்கேல் II (மேனேஜர்) - 21 - 32 வயது
3. ஆபிசர் ஸ்கேல் I (அசிஸ்டென்ட் மேனேஜர்) - 18 -30 வயது
4. ஆபிஸ் அசிஸ்டென்ட் - 18 - 28 வயது

கல்வித்தகுதி :

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் அனைத்துக்கும் இளங்கலை பட்டப்படிப்பு அவசியம். ஆபிசர் ஸ்கேல் 1,2 பணியிடங்களுக்கு கூடுதலாக கல்வித்தகுதியும், பணி அனுபவமும் இருக்க வேண்டும். மேற்கூறிய தகுதி இருப்பவர்கள் ஐ.பி.பி.எஸ் இணையதளத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

தேதி விவரம் :

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள் - ஜூன் 8 முதல் 28 வரை

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் - ஜூன் 28

தேர்வுக்கு முந்தைய பயிற்சிக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதி - ஜூலை 9

தேர்வுக்கு முந்தைய மாதிரி பயிற்சி தேர்வு - ஜூலை 9 முதல் ஜூலை 25 வரை

Also read... NLC Recruitment 2021: நெய்வேலியில் 65 SME ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

முதல்நிலை தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்கும் தேதி - ஜூலை அல்லது ஆகஸ்ட்

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள் - ஆகஸ்ட்

முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம் - செப்டம்பர்

முதன்மை தேர்வு - செப்டம்பர், அக்டோபர்

காலிப் பணியிடங்கள் :

ஆபிஸ் அசிஸ்டென்ட் - 5134 பணியிடங்கள்
ஆபிசர் ஸ்கேல் 1 - 3876 பணியிடங்கள்
ஆபிசர் ஸ்கேல் 2, 3 - 1283 பணியிடங்கள்

வங்கிப் பணியாளர் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லிங்க் ibps.in-லிங்கில் சென்று Apply Online - ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் தகுதியின் அடிப்படையிலான பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: