முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / IBPS Admit Card Released: ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

IBPS Admit Card Released: ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியானது

காட்சிப் படம்

காட்சிப் படம்

www.ibps.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

  • Last Updated :

Preliminary Exam Call Letter for CRB -RRBs-XI - Office Assistants:  பிராந்திய ஊரக வங்கி முதல்நிலை  எழுத்துத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை ஐபிபிஎஸ்  தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முன்னதாக, பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர் (பல்துறை பணி), அலுவலர் நிலை 1 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை IBPS அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த, ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம் 8285 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அலுவலக உதவியாளர் (பல்துறையாளர் பணி) பதவிக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வு,முதன்மை எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டு நிலையில் தெரிவுகள் நடைபெறும். இதில், முதன்மைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி நியமனங்கள் நடைபெறும். முதல் நிலைத் தேர்வு தகுதித் தேர்வாக மட்டும் நடத்தப்படும்.

அலுவலர் நிலை 1 பதவிக்கு முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி நியமனங்கள் நடைபெறும். முதல் நிலைத் தேர்வு தகுதித் தேர்வாக மட்டும் நடத்தப்படும்.

அலுவலர் நிலை 2 மற்றும் 3ம் பதவிகளுக்கு ஒற்றை ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சிப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு  தொடர்புடைய ஊரக வங்கிகள் நேர்காணல் நடத்தி நியமனங்கள் செய்யும்.

முக்கியமான நாட்கள்:

முதல்நிலைத் தேர்வுஆகஸ்ட் மாதம் 7,13,14,20,21
ஒற்றை ஆன்லைன் எழுத்துத் தேர்வுசெப்டம்பர்,24
முதன்மைத் தேர்வுஅலுவலர் நிலை I - செப்டம்பர், 24அலுவலக உதவியாளர் - அக்டோபர், 1

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச் சீட்டை ஐபிபிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. www.ibps.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவு எண்,கடவுச் சொல் , பிறந்த தேதி ஆகிய விவரங்களை சமர்ப்பித்து நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் வாசிக்க  ICSE X Results: இன்று மாலை 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - ஐசிஎஸ்இ

பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

top videos

    பிராந்திய மொழிகளில் தேர்வு: உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில் சம வாய்ப்பை உருவாக்கும் நோக்கில், பிராந்திய ஊரக வங்கிகளுக்கான அலுவலக உதவியாளர், அலுவலர் நிலை 1 ஆகிய பணிகளுக்கான தேர்வை தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

    First published:

    Tags: Ibps