ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

வங்கி வேலைவாய்ப்பு... 710 காலியிடங்கள் - உடனடியாக விண்ணப்பியுங்கள்

வங்கி வேலைவாய்ப்பு... 710 காலியிடங்கள் - உடனடியாக விண்ணப்பியுங்கள்

பொதுத் துறை வங்கி வேலைவாய்ப்பு

பொதுத் துறை வங்கி வேலைவாய்ப்பு

IBPS CRP specialist officers notification: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய நிலைகளில் பெறும் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் (Specialist Officer) காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  ஆட்சேர்க்கை நிறுவனம்வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்)
  பதவி ஐ.டி அலுவலர், வேளாண் அலுவலர், இந்தி மொழி அலுவலர், மனித வள அலுவலர், சட்ட அலுவலர், சந்தை விற்பனை அலுவலர்
  காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை710 காலிப்பணி இடங்கள்
  வயது விவரம்01.11.2022 அன்று, விண்ணப்பதாரர் 20 வயதுக்கு மேலாகவும்,  30 வரை பூர்த்தி அடையாதரவாகவும்  இருக்க வேண்டும்.
  கல்வித்தகுதிஅந்தந்த பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க கடைசி தேதி21.11.2022

  விண்ணப்பக் கட்டணம்:  பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.175ஐ செலுத்த வேண்டும்.

  இதையும் வாசிக்கமத்திய அரசில் 24,369 காவலர் பணியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

  ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.850 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

  விண்ணப்பம் செய்வது எபப்டி? 

  www.ibps.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21-11-2022 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 21-11-2022.

  முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகிய நிலைகளில் பெறும் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN PARTICIPATING BANKS

  Published by:Salanraj R
  First published:

  Tags: Central Government Jobs