Home /News /employment /

இந்திய வங்கிகளில் 6035 எழுத்தர் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி?

இந்திய வங்கிகளில் 6035 எழுத்தர் காலிப்பணியிடங்கள்: விண்ணப்பம் செய்வது எப்படி?

கோப்புப் படம்

கோப்புப் படம்

வயது, கல்வித் தகுதி, சலுகைகள், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவர் தொடர்பான அனைத்து விபரங்களை கவனமாக நிரப்ப வேண்டும்.

  பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் நடத்தும் இத்தேர்வில் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 6035

  முக்கியமான நாட்கள்: 

  ஆட்சேர்ப்பு அறிவிக்கை நாள் : 01/07/2022

  இணையதள விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 21/07/2022

  விண்ணப்பக் கட்டணம்: அன்றிரவுக்குள்ளே  கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

  வயதுக்கான தகுதி:  எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 அன்று 28-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

  எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர். ஆதரவற்ற விதவைகள்/கணவரை பிரிந்து வாழும் பெண்கள் ஆகியோருக்கும் வயது உச்ச வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பக் கட்டணம்:  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.850ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.175 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

  விண்ணப்பம் செய்வது எப்படி?

  இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த  அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  காலியிடங்கள் - தமிழ்நாடு


  விண்ணப்பம் செய்வது எப்படி? 

  https://www.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்/முடியும்.

  விண்ணப்பதாரர்கள் தங்களுக்கென பதிவெண் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும் (Click Here For New Registration).

  வயது, கல்வித் தகுதி, சலுகைகள், தொடர்பு எண், மின்னஞ்சல் முகவர் தொடர்பான அனைத்து விபரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். மிகுந்த கவனத்துடன் இதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  இதையும் வாசிக்க:   ஆர்வத்தை தூண்டும் தவறான விளம்பரங்கள்: கல்வித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

  தேவைப்படும் ஆவணங்கள்/சான்றிதழ்கள், இடது விரல் கைரேகை பதிவு, புகைப்படம், கையொப்பம், சுய கையொப்பமிட்ட சான்றிதழ்  ஆகியவற்றை இணையவழி விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  தெரிவு செய்யப்படும் முறை: முதல்நிலை மற்றும்  முதன்மைத் தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறும். முதல் நிலை தேர்வு முடிவின் அடிப்படையில்  விண்ணப்பத்தாரர்கள்  முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். ஆங்கிலம், இந்தியுடன் நாட்டின் 13 பிராந்திய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும்.

  இதையும் வாசிக்க:  பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? புள்ளிவிவரங்கள் வெளியானது

  இத்தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS IN PARTICIPATING BANKS

   
  Published by:Salanraj R
  First published:

  Tags: Banking jobs, Ibps

  அடுத்த செய்தி