2018- IBPS வங்கி க்ளார்க் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.
IBPS வெளியிட்ட அறிக்கையில் அடிப்படையில் டிசம்பர் 29-ம் தேதிக்கு முன்னர் முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று டிசம்பர் 28-ம் தேதி ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத் தேர்வில் தேர்வு பெறுவோர் வருகிற ஜனவரி மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ள மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். IBPS Mains 2019 தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜனவரி 4 அல்லது 5-ம் தேதிகளில் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 29, 2017 அன்று IBPS முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியாகி ஜனவரி 21, 2018 அன்று வெளியானது.
IBPS இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்குமாகத் தேவைப்படும் க்ளார்க் பணியாளர்களைத் தேர்வு செய்து காலி இடத்துக்கானப் பணிகளை நிரப்புகிறது. இந்தத் தேர்வு 7275 காலிப் பணியிடங்களுக்காக IBPS நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான ஆட்கள் தேர்வு பணி IBPS-ஆல் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள:
1.
ibps.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. 'Clerk Prelim results' என்ற லிங்கை தேர்வு செய்ய வேண்டும்.
3. அதில், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்ட முறையில் நிரப்பவும்.
4. உங்கள் தேர்வு முடிவுகளைப் பார்த்த பின்னர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
5. பிரின்ட் செய்யும் வசதியும் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.