Home /News /employment /

ஐபிபிஎஸ் எழுத்தர் பதவி: முதல்நிலைத் தேர்வு அட்மிட் கார்டு வெளியானது

ஐபிபிஎஸ் எழுத்தர் பதவி: முதல்நிலைத் தேர்வு அட்மிட் கார்டு வெளியானது

ஐபிபிஎஸ் தேர்வு

ஐபிபிஎஸ் தேர்வு

IBPS Admit Card: செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
    ஐபிபிஎஸ் எழுத்தர் (Clerk) முதல்நிலை போட்டித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டது.  வரும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    முன்னதாக, பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 6,035 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

    அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி? 

    முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

    “Click here to download online prelimnary Call letter for CRP CLERKS - XII” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    ibpsonline.ibps.in என்ற இணையபக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அதில், விண்ணப்ப பதிவு எண்/ கடவுச்  சொல்- பிறந்த தேதி ஆகிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஒருவேளை, பதிவு எண்/கடவுச் சொல் நியாபகம் இல்லாத பட்சத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை பார்க்கவும்.

    பிறகு, கணினித் திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.   

    ஐபிபிஎஸ் எழுத்தர் பணிக்கான தெரிவு முறை:  முதல்நிலைத் தேர்வு (இது முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்க மட்டும் நடைபெறும்) முதன்மை எழுத்துத் தேர்வு என இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் (English Language and Comprehension) ஆகிய மூன்று  கூறுகளைக் கொண்டது.

    செப்டம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் கேள்விகள் இடம்பெறும்.

    முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் மாதம் நடைபெறும் முதன்மைத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    முதல்நிலைத் தேர்வு குறித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    சென்னையில் இலவச பயிற்சி வகுப்புகள்: 

    சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    இதையும் வாசிக்க: போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - மிஸ் பண்ணாதீங்க

    இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் (Whatspp) எண்ணிற்கு தங்களது பெயர் கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Ibps

    அடுத்த செய்தி