Home /News /employment /

IBPS: 7000க்கும் மேற்பட்ட எழுத்தர் காலியிடங்கள், மிகப்பெரிய பணிச் சேர்க்கையைத் தொடங்கிய ஐபிபிஎஸ்

IBPS: 7000க்கும் மேற்பட்ட எழுத்தர் காலியிடங்கள், மிகப்பெரிய பணிச் சேர்க்கையைத் தொடங்கிய ஐபிபிஎஸ்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இப்பதவிக்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு (PSBs – CRP CLERK-XII) செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    IBPS CRP Clerk XII : அரசு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் வெளியிட்டது. இதற்கு, இணைய தளம் வாயிலாக  நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

    பாங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் வங்கி  உள்ளிட்ட 11 பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை ஐபிபிஎஸ் நடத்துகிறது. நாட்டின் மிகப்பெரிய பணிச் சேர்க்கையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

    இப்பதவிக்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு (PSBs – CRP CLERK-XII) செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும், முதன்மைத் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமான நாட்கள்: 

    • இணைய வழி விண்ணப்பம் சமர்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 1-07-2022

    • இணைய வழி  சமர்பிப்பதற்கான கடைசி நாள்: 21-07-2022

    • அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்.

    • தேர்வுக்கு முந்தைய பயிற்சி வகுப்புகள் : ஆகஸ்ட் மாதம்

    • முதல்நிலைத் தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்ய - ஆகஸ்ட்


    பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதலாம்: ஆங்கிலம், இந்தியுடன் நாட்டின் 13 பிராந்திய மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும்.

    இத்தேர்வு, பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டதாக உள்ளது. சிறியளவு பயிற்சி இருந்தால் கூட வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்படும்.

    இதையும் வாசிக்கதற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு  

    விண்ணப்பம் செய்வது எப்படி? 

    எப்படி விண்ணப்பிப்பது: முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.

    “Click here to apply online for CRP CLERKS - XII” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.

    பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.

    எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

     
    Published by:Salanraj R
    First published:

    Tags: Banking jobs

    அடுத்த செய்தி