ஐபிபிஎஸ் கிளர்க் முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 28, 29 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக செய்யப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீங்கள் விண்ணப்பிக்கும்போது, தேர்வு செய்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களே உங்களுக்கு தேர்வு எழுதுவதற்காக வழங்கப்படும்.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணி | IBPS Clerk |
காலிப்பணியிடங்கள் | 5,830தமிழ்நாட்டில் மட்டும் 268 காலிப்பணியிடங்கள் உள்ளன. |
தமிழ்நாட்டில் மட்டும் 268 காலிப்பணியிடங்கள் உள்ளன. | தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் எழுத்து தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். |
வயது | Minimum: 20 years Maximum: 28 years |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 12.07.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.08.2021 |
கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். கணினி தொடர்பாக டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம். |
இந்த ஆண்டு பங்கேற்கும் வங்கிகள் | பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா |
விண்ணப்ப கட்டணம் | Others - Rs. ரூ.850 -SC/ST/PWD/Women - 175 |
அதிகாரபூர்வ வலைத்தளம் https://ibps.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://ibpsonline.ibps.in/crpcl11jun21/
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy