Home /News /employment /

அக்னிபத் போராட்டங்களுக்கு மத்தியில் ஆட்சேர்ப்பு தேதியை அறிவித்த இந்திய விமானப்படை தளபதி

அக்னிபத் போராட்டங்களுக்கு மத்தியில் ஆட்சேர்ப்பு தேதியை அறிவித்த இந்திய விமானப்படை தளபதி

காட்சிப் படம்

காட்சிப் படம்

இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    அக்னிபத் திட்டத்தின் கீழ், வரும் 24ம் தேதி முதல் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்க இருப்பதாக  இந்திய விமானப்படை  தளபதி வி.ஆர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தியதை வரவேற்கிறேன். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்திய விமானப்படை வரும் 24ம் தேதியில் இருந்து தொடங்கும்" என்று தெரிவித்தார்.

     



    அதேபோன்று, 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய ராணுவப்படை துரிதப்படுத்தி வருகிறது.

    முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவத்தின் துணை தளபதி மனோஜ் பாண்டே," அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியிட இருக்கிறோம். http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



    இந்த திட்டத்தால் ஏராளமான இளைஞர்கள் பயன் பெறுவார்கள். இளைஞர்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கும் சேவையாற்ற முடியும். திட்டத்தின் முழு பலன்கள் தெரிந்தால் இளைஞர்கள்  போராட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    இதற்கிடையே, அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, பிகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம்,ஹரியானா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்து காணப்படுகிறது. போராட்டத்தின் காரணமாக, தெலுங்கானாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றுவதராக முயற்சித்து வந்தவர் என்று தெரிய வருகிறது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Agnipath, Army jobs, Recruitment

    அடுத்த செய்தி