ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 122 காலிப் பணியிடங்கள்!

நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். இது, மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமாகும்.

news18
Updated: October 23, 2018, 8:32 PM IST
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 122 காலிப் பணியிடங்கள்!
ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
news18
Updated: October 23, 2018, 8:32 PM IST
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தில் 122 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31.

நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனங்களுள் ஒன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன். இது, மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம்.

எவ்வளவு பணியிடங்கள்? மும்பையிலுள்ள ஹெச்பிசிஎல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் பிராசஸ் டெக்னீசியன், அசிஸ்டென்ட் பாய்லர் டெக்னீசியன், அசிஸ்டென்ட் லேபாரட்ரி அனலிஸ்ட், அசிஸ்டென்ட் மெயின்டனன்ஸ் பயர் ஆஃபிஸர் உள்பட 122 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: பணியிடங்களுக்கு ஏற்ப பி.எஸ்.சி. வேதியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஃபயர் ஃபைட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ளமா படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

வயது வரம்பு: 18 முதல் 25 வரை.

தேர்வு முறை: கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் குறிப்பிட்ட சில பணிகளுக்கு திறனறியும் தேர்வு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.

கடைசி தேதி: தகுதி வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 31. மேலும் விவரங்களுக்கு www.hindustanpetroleum.com என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
First published: October 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...