ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

ரெஸ்யூம்

ரெஸ்யூம்

Resume Writing: தெளிவற்ற, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சகலவற்றையும் தவிர்த்து விட வேண்டும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

Resume Writing : நம்மில் பெரும்பாலானோர் என்னதான் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், மிகக் குறைந்த அந்தஸ்து கொண்ட பணிகளில் உழைத்து கொண்டு இருக்கிறோம்.

இந்த உழைப்பு உலகில் தொழில்சார் திறன்களைத் தாண்டி, சில மென்மையான திறன்கள் (Soft Skills)  இருந்தால்  தான்  உயர்ந்த லட்சியங்களைப் அடைய முடியும். அந்த வகையில், பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு சிறப்பான ரெஸ்யூம் நம் கையில் இருக்க வேண்டும்.

பொதுவாக, இந்த ரெஸ்யூம்-ஐ தயாரிப்பதற்கு நண்பர்களையோ, உறவினர்களையோ நம்ப வேண்டியிருக்கிறது. இவர்கள் கைவிரித்து விட்டால், இணையத்தில் உள்ள மாதிரி ரெஸ்யூமைகளை பதிவிறக்கம் செய்து அதில் சில திருத்தங்களை மேற்கொண்டு தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம்.

எனவே, இந்த தொகுப்பில் சொந்தமாக, தரமான முறையில் ரெஸ்யூமை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

ரெஸ்யூம் - சில அடிப்படைகள் :

உங்கள் திறன்கள், பணி அனுபவங்கள், கல்வி தகுதி  பற்றிய சுய விவர குறிப்பாகும்.

உங்கள் திறன்கள் அதீதப் பொதுமை கொண்டாதாக இருக்க கூடாது. அந்த துறையில் உங்களிடம் உள்ள குறிப்பிட்ட திறன்களை மட்டுமே விவரிக்க வேண்டும்.

ரெஸ்யூம் என்பது ஒருவகையான சுய அனுபவமாகும். அதில், உள்ள உள்ளடக்க விவரங்கள் உங்களை முதன்மையானதாக கொண்டிருக்க வேண்டும்.

உதாரணமாக, கற்றேன், பயிற்சி அளித்தேன், ஆலோசனை வழங்கினேன், நிர்வகித்தேன், மேற்பார்வையிட்டேன்  போன்ற வார்த்தைகளை  பயன்படுத்த வேண்டும்.

ரெஸ்யூம் என்பது ஒருவகையான உரையாடல். இன்னொருவரை கவர்வதற்காக மட்டும் அந்த உரையாடல் இருக்கக் கூடாது. உங்களை வெளிப்படுத்தும் களமாகவும் இருக்க வேண்டும்.

Harvard பல்கலைக்கழகம் தயாரித்த மாதிரி ரெஸ்யூம்

தெளிவற்ற, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சகலவற்றையும் தவிர்த்து விட வேண்டும்.

கதை பாணியில் இருக்க கூடாது. மிக நீண்ட சொற்றடர்களை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள்.

இதையும் வாசிக்க: தொழில் தொடங்க ரூ. 75 லட்சம் வரை மானியம்... படித்த இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு

அதேபோன்று, உங்கள் சாதனைகள் பற்றிய தகவல்கள்  தான் தோன்றித்தனமாக இருக்க கூடாது. தேவையான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இருக்க வேண்டும். உதாரணமாக, எனது பணி காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 30% ஆக அதிகரித்தது என்ற அளவில் இருக்க வேண்டும்.

எழுத்துப் பிழை, இலக்கண பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முடிந்தவரை,  ரெஸ்யூம் முழுவதும்  ஒத்தநிலை, ஒற்றுமை நிலைமை இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

ரெஸ்யூம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: 

Create a Resume/CV or Cover Letter

Published by:Salanraj R
First published:

Tags: Job, Private Jobs