உயர்நிலைக்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவுகளை பள்ளி வளாகத்திலேயே மேற்கொள்ளும் வசதியினைக் கைவிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துளளது.
மனுதாரர்கள், ஒவ்வொரு மாவட்டத்திற்கென இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலங்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பதிவுகள் மேற்கொள்ளலாம் என்றும் (அல்லது) வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக பதிவுகள் மேற்கொள்ளலாம் என்றும் (அல்லது ) அருகில் இருக்கும் இ-சேவை வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இதையும் வாசிக்க: பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் நடைமுறை ரத்து
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைய, அரசு மற்றும் தனியார் துறை வேலையில் முன்னுரிமை பெற, சுய வேலைவாய்ப்பு அறிவுரைகள் பெற வேலைவாய்ப்பில் பதிவு செய்வது முக்கியமானதாகும். சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களின் உயர்பதிவேட்டில் 76,24,726 பேர் உள்ளனர். இதில், 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களை எண்ணிக்கை மட்டுமே 16,73,803 ஆகும்.
எனவே, எவ்வாறு பதிவு செய்வது என்பதை இங்கே காண்போம்:
தமிழக அரசின் அறிவிப்பின் படி, இந்திய குடிமகன்/குடிமக்கள், தமிழ்நாட்டில் வசிப்பவர் தான் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதியலாம்.www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக பதிவுகள் மேற்கொள்ளலாம். இதற்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி என்று எதுவும் இல்லை.
tnvelaivaaippu.gov.in விண்ணப்ப பதிவு: tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதள முகவரிக்கு சென்று புது பயனாளர் (New user என்ற ) என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
முகப்புப் பக்கத்தில், விண்ணப்பதாரர் தனது பெயர், இருப்பிடம், பாலினம், பிறந்த தேதி, ஆதார் எண், தந்தை பெயர், மின்னஞ்சல் முகவரி, பதவு எண், கடவுச் சொல், நிரந்தர முகவரி ஆவணங்கள், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தகட்டமாக, கல்வித் தகுதி, தனிமனித விவரம், திறன் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின், உங்களுக்கான பதவி எண் உருவாகிவிடும்.
தனிப்பட்ட விவரங்கள் சரியாகவும் முழுமையாகவும் உள்ளீடு செய்ய வேண்டும். தவறான மற்றும் சரியற்ற விவரங்களை அளிப்பது விண்ணப்பதாரர்களின் பதிவு இரத்து ஆக வழி வகுக்கும் என்று வேலைவாய்ப்பு துறை தெரிவித்துள்ளது.
இ -சேவை மையங்கள் மூலம் பதிவு செய்தல்:
கல்வித் தகுதியினை பதிவு செய்தல்; பதிவு புதுப்பித்தல்; வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை பிரதி எடுத்தல்; கூடுதல் கல்வித்தகுதியினை பதிவு செய்தல் மற்றும் மாவட்டத்திற்குள் முகவரி மாற்றம் செய்தல் போன்றவைகளை மாணவர்கள் தங்கள் அருகாமையிலேயே அரசு இ- சேவை மையங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.