பெருகிவரும் டிஜிட்டல் உலகில் அனைத்தும் நமது கையில் உள்ள தொலைப்பேசிக்குள் சுருங்கி வருகிறது. குறிப்பாக கொரானாவிற்கு பின் அனைத்து தேவைகளும் மொபைல் போனிலே முடிந்துவிடும் நிலை உருவாகியுள்ளது. இணையதளம் எந்த அளவு உலகை நமக்கு விரைவாக காட்டுகிறதோ அதற்கு ஏற்றவாறு அதில் நடக்கும் மோசடிகளும் ஒரு பக்கம் வளர்ந்து வருகின்றன. நல்லது கெட்டது அனைத்து உருவாக்கத்திலும் இருக்கும் என்பது இணையதளத்திற்கும் பொருந்தும்.
அந்த வகையில் பெருகி வரும் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இந்நிலையில் வேலைவாய்ப்பு என்ற வார்த்தையை கருவியாய் பயன்படுத்தி நிறைய மோசடிகள் நடைப்பெற்று வருகின்றன. குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள் இளம் பெண்களை குறிவைத்து பணப்பறிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. அதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கான விழிப்புணர்வு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
ஆன்லைன் மோசடிகள் பற்றிவரும் எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் அதனை உள்வாங்கி அதன்படி நடப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Job, Online Frauds