ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஒரு மாதத்திற்குள் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை..அப்ளை மட்டும் பண்ணுங்க

ஒரு மாதத்திற்குள் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை..அப்ளை மட்டும் பண்ணுங்க

job alert, job openings

job alert, job openings

employability: வேலை தேடுவோர் தங்களின் திறமைகளை    பற்றிய தகவல்களைப் பதிவு செய்யவும், அருகாமையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடவும்  அசீம் டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு தொடங்கியது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வேலை தேடும் இளைஞர்கள் தங்களை திறனை மேம்படுத்தி, மிகக் குறுகிய காலத்தில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  அசீம் டிஜிட்டல் தளம்: உங்களிடம் இருக்கும் உலகிற்கு தெரிந்தால் வேலைவாய்ப்புகள் தேடி வரும். அந்த வகையில், வேலை தேடுவோர் தங்களின் திறமைகளை    பற்றிய தகவல்களைப் பதிவு செய்யவும், அருகாமையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தேடவும்  அசீம் டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.  இந்த தளத்தின் மூலம், நாட்டின் தற்போதைய வேலைவாய்ப்பு   போக்குகள் என்ன, எந்த தகுதிக்கு தற்போதைய தேவை  உள்ளது போன்ற பல்வேறு விவரங்களை பெற முடியும்.

  A S E E M Candidate/ Job Seeker Interface

  தமிழ்நாடு அரசின் தனியார் துறை  வேலைவாய்ப்பு தளம்:  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறவும், ஆட்கள் தேவைப்படும் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையானது, ’தமிழ்நாடு அரசின் தனியார்துறை வேலை இணையதளம்’ (Tamil Nadu Private Job Portal) என்ற இணையதளத்தை தொடங்கியது.

  சமீபத்திய விவரங்களின் படி, கிட்டத்தட்ட 42 தொழிற் பிரிவுகளின் கீழ் 101,703 பணிக் காலியிடங்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இவ்விணையத்தளத்தின் கீழ் பதிவு செய்து, பயனடையலாம். ஊதியம் மற்றும் இதர தேவைகள், வேலை செய்யும் இடம், நேரம் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களின்படி, வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசமானது.

  மேலும், விவரங்களுக்கு:  www.tnprivatejobs.tn.gov.in 

  முன்கற்றல் அனுபவம் (Prior Learning Experience):  கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. நாட்டில் உள்ள இளைஞர்களின் திறன்களை அதிகரிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த திட்டம் முனைகிறது. இந்த திட்டத்தில், "தேசிய திறன் தகுதி கட்டமைப்பு" (National Skill Qualification Framework ) என்பது மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு, ஒரு குறிப்பிட்ட தகுதியை பெறுவதற்கான  அறிவுநிலை, திறன்களை குறிப்பிடுகிறது.

  மேலும்,  இந்த தகுதி நிலையை நேரடி பயிற்சி மூலமோ, மறைமுக பயிற்சி மூலமோ, அனுபவ பயிற்சி மூலமாகவோ அடைய முடியும்.  அதவாது, ஒரு குறிப்பிட்ட தொழில் பிரிவில் தேவைக்கான உரிய அறிவையம் , ஆற்றலையும், தகுதியினையும் ஒருவர் பெற்றுள்ளார் என்பதை அடையாளப்படுத்துவதற்கான கருவியாக இந்த கட்டமைப்பு உள்ளது.

  இந்த கட்டமைப்பின் கீழ், முன்கற்றல் அனுபவம் என்ற திட்டத்தை மத்திய/மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதன் கீழ், கட்டுமானம், மின்சாரம், பிளம்பிங், மண் பாண்டங்கள், கைவினைப் பொருட்கள் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் தொழில் அறிவு, திறன், தகுதி ஆகியவை மேற்கூறிய   கட்டமைப்பின் கீழ் மதிப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு நீங்கள்  நீங்கள் உயர்கல்வியில் கூட சேர முடியும்.  மேலும், இந்த சான்றிதழ், உங்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

  இதையும் வாசிக்க சிறுபான்மையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள் குறித்து தெரியுமா?

  கட்டுமானம், சரக்கு மேலாண்மை, ஆயுத்த ஆடை, தானியங்கி, ,ஜவுளி,  தோல்பொருட்கள் ஆகிய தொழில் பிரிவுகளில் தமிழ்நாடு அரசு முன்கற்றல் அனுபவம் (Prior Learning Experience) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை,  பற்றி தெரிந்து கொள்ள தமிழ்நாடு தொழில் திறன் மேம்பாட்டுக்  கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.

  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்  கழகம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கிண்டி, சென்னை -32. அலுவலக எண்: 044 – 22500107 Che

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apprentice job, Employment