Home /News /employment /

இஸ்ரோவில் பணிபுரிய என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்?

இஸ்ரோவில் பணிபுரிய என்ன படிக்க வேண்டும்? எங்கு படிக்க வேண்டும்?

இஸ்ரோ

இஸ்ரோ

இங்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம், படிப்பை முடிப்பவர்களுக்கு இஸ்ரோவில் பணி நியமனம் பெறுவதற்கான சலுகைகள் உண்டு. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
    வரவிருக்கும் காலங்களில் விண்வெளித் தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சியில் அசைக்க முடியாத இடத்தை பிடிக்க இருக்கிறது. 2019ல்  சர்வதேச விண்வெளிப் பொருளாதாரம் 360 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பிடப்படுகிறது. இதில், இந்தியாவின் பங்கு 2 சதவீதமாக இருக்கலாம் என்று மதிப்படப்படுகிறது.  சர்வதேச அளவில், இந்தியாவின் விண்வெளித் துறையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விண்வெளித் துறையில் மிக குறைந்த செலவில்  அதிக திறன்கொண்ட கொண்ட நிறுவனமாக இஸ்ரோ விளங்குகிறது. சுகாதாரம், கல்வி, தொலைத்தொடர்பு, பேரிடர் உள்ளிட்ட  துறைகளில் சாமானியா மக்களின் அடிப்படைத் தேவைகளையும்  இஸ்ரோ பூர்த்தி செய்து வருகிறது. சர்வதேச அரசியல், நாடுகளுக்கு இடையேயான  ராஜதந்திர உறவுகள், போர் யுக்தி என அனைத்திலும் விண்வெளித் துறையின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

    இஸ்ரோவில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? 

    இஸ்ரோ நிறுவனத்துக்கு தேவைப்படும் மனித வளங்களை உருவாக்கிடும் விதமாக திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளி மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) அமைக்கப்பட்டுளளது.   இது, 1956ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 3ம் பிரிவின் கீழ், பி.டெக், எம்டெக் பாடங்களில் பட்டம் வழங்கும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

    இளநிலை படிப்பு:

    பி.டெக் (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல்தொடர்பு - ஏவியானிக்ஸ் ) - 60 இடங்கள்

    பி.டெக் ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் - 60 இடங்கள்

    இரட்டை பட்ட படிப்பு (Dual Degree) 

    ஐந்து வருட இரட்டை பட்டப் படிப்பு (பிடெக் + எம்எஸ்சி ) - 20 இடங்கள்

    இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையின் படி, 10% இடங்கள் பொது பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு (GEN-EWS) ஒதுக்கப்பட்டுள்ளது. 15% இடங்கள் பட்டியல் பரிவனருக்கும் (SC), 7.5% பட்டியல் பழங்குடியினருக்கும் (51) மற்றும் 27% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (OBC-NCL) ஒதுக்கப்பட்டுள்ளது.

    அடிப்படைத் தகுதிகள் : கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சேர்க்கை முறை: மாணவர்கள், ஜேஇஇ (அட்வான்ஸ்) பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர்  சேர்க்க நடைபெறும்.

    இங்கு கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம், படிப்பை முடிப்பவர்களுக்கு இஸ்ரோவில் பணி நியமனம் பெறுவதற்கான சலுகைகள் உண்டு.

    மேலும், விவரங்களுக்கு:

    About IIST 

    IIST Undergraduate Admission
    Published by:Salanraj R
    First published:

    Tags: ISRO

    அடுத்த செய்தி