ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) வெளியிட்டுள்ளது. இந்த, அறிவிப்பின் மூலம் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் 'ஏ' ஆகிய பணிகளில் உள்ள 4500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முதற்கட்ட நிலை - I தேர்வு (கணினி வழி) : 2023, பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை என்ன?
எஸ்எஸ்சி போன்ற சிக்கலானத் தேர்வுகளை எதிர்கொள்ள முதலில் தேர்வின்த் தன்மைப் பற்றி முழுக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
நிலை I, நிலை II என இரண்டு கட்டத் தேர்வு நடைபெறும். நிலை - Iல் தேர்ச்சி பெற்றவர்கள் நிலை-IIல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
நிலை I தேர்வில், பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Basic Arithmetic skills), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் (English Language) ஆகிய நான்கு பிரிவுகளில் இருந்து சுமார் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வின் கால அளவு 60 நிமிடங்களாகுவம். அதாவது, ஒவ்வொரு கேள்விக்கும் சரசியாராக தேர்வர் 35- 40 நொடிகளில் பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும், தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோன்று, தவறான பதிலுக்கு 0.5 மதிப்பெண் குறைக்கப்படும்.
இதையும் வாசிக்க: TNPSC Group 4 Exam: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?
ஒரு கேள்விக்கு, வெறும் 35 நொடிகள் எனும் போதே, தேர்வின் தன்மையை ஒருவரால் யூகிக்க முடியும். எஸ்எஸ்சி தேர்வுகளின் வெற்றியின் அடிப்படையே இந்த வேகம் தான். தோராயமாக கட்-ஆஃப் மதிப்பெண்கள் 130 முதல் 140 வரை கணிக்கப்படுகிறது. எனவே, ஒட்டு மொத்தமாக தேர்வர் 70 கேள்விகளுக்கு குறையாமல் சரியான பதில் அளித்திருக்க வேண்டும்.
எனவே, தேர்வுக்கு தயாராகும் போதே இந்த வேகத்தை மனதில் கொள்ளுங்கள்.
SSC General Awarenee (பொது விழிப்புணர்வு):
டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஐபிபிஎஸ் வங்கிப் பணிகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு, பொது விழிப்புணர்வு (General Awareness) பகுதி சற்று எளிமையானதாக இருக்கும். கூடுதலாக, தெரிந்து கொள்ள The Bankers adda, gktoday.in , tamilnaducareerservices.tn.gov.in, shankar ias academy ஆகிய இணையதளங்கள் பொது விழிப்புணர்வு குறித்த பாடத்திட்டங்களை இலவசமாக வழங்கி வருகின்றன.
SSC Exam Basic Arithmetic skills and Logical reasoning( பிரச்னை தீர்க்கும் ஆற்றல், காரணங்கானல்)
எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெற, Basic Arithmetic skills மற்றும் Logical Reasoning பகுதிகள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற பயிற்சி எடுக்க வேண்டும். NCERT 9,10,11,12 ஆகிய வகுப்புகளில் உள்ள கணித பாடங்களில் உள்ள கணக்குகளை பயிற்சி செய்யுங்கள். Arihant புத்தகம் (SSC CHSL (10+2) Combined Higher Secondary Tier 1 Guide 2022) உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும், எஸ்எஸ்சி போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்க: TAHDCO LOAN: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.2.25 லட்சம் வரை மானியம் - பயன் பெறுவது எப்படி?
கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் TN Career Services Employment' என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
முந்தைய வினாத்தாள்கள் அவசியம்:
எஸ்எஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற முந்தைய ஆண்டுகளின் வினாத் தாள்கள் உதவிகரமானதாக இருக்கும். ssc chsl previous year question paper என்று கூகுள் தேடினால் போதும். ஏகப்பட்ட இணைய தளங்கள் முந்தைய ஆண்டு வினாத்தாட்களை பதிவேற்றம் செய்துள்ளன. தமிழ்நாடு அரசின் tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கூட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி! பயிற்சி!! பயிற்சி!!! தான் எஸ்எஸ்சி தேர்வின் அடிப்படை. மேற்கூறிய வளங்களை பயன்படுத்திக் கொண்டு, ஒரு மாதத்தில் கூட தேர்வரால் தேர்வுக்கு தயாராகி விட முடியும். பிரத்தியோகமாக வீட்டில் இருந்து எஸ்எஸ்சி/டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கும், அலுவலக வேலை நேரத்திற்கு பின்பு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இது பொருந்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs