ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஓசூரில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி... 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.... அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

ஓசூரில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி... 16 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு.... அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்

ஆப்பிள் ஐ-போன்கள் உற்பத்தி

ஆப்பிள் ஐ-போன்கள் உற்பத்தி

Hosur Tata Electronics iPhone Expanision: உலகளவில் மொபைல் போன் சந்தை விற்பனையில், ஆப்பிள் நிறுவனம் கோலோச்சி வருகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதன் காரணமாக நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

  இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக, மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகுவதும், ஏற்கனவே இயங்கும் தொழிற்சாலைகள் தற்போது விரிவாக்கத்திற்கு செல்வதும் மிக வேகமாக நடைபெற்று கொண்டு வருகிறது.

  அதன் ஒரு பகுதியாக, உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் ஓசூரில் அமைந்துள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கும், அதை ஒட்டிய பகுதிகளில் வாழும்  மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு உருவாக இருப்பதாக தெரிவித்தார்.  மேலும், 16 ஆயிரம் பேரை விரைவில் டாடா நிறுவனம் பணியமர்த்த உள்ளதாக தெரிவித்தார். 

  இதையும் வாசிக்க: ஐ.டி துறையில் அதிக சம்பளத்துடன் ஒரு நல்ல வேலை வேண்டுமா? இந்த செய்தி உங்களுக்குத் தான்

  உலகளவில் மொபைல் போன் விற்பனை சந்தையில், ஆப்பிள் நிறுவனம் கோலோச்சி வருகிறது. இந்தியாவில், ஃபாக்ஸ்பான் ஹோன் ஹை, விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய 3 நிறுவனங்கள் (Foxcon Hon Hai, Wistron and Pegatron) ஆப்பிள் ஐ-போன்களை ஒப்பந்த அடிப்படையில் தயாரித்து வருகின்றன. இந்நிலையில்,  ஓசூரில் செயல்பட்டு வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஏதேனும் ஒரு ஒப்பந்ததாரர்களுடன் கைகோர்த்து  ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்க உள்ளது.  இதற்கான, விரிவாக்க பணிகளை அந்நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Apple, Hosur