தமிழக வேளாண் துறையில் 175 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக வேளாண் துறையில் 175 அதிகாரி பணியிடங்கள்  காலியாக உள்ளன. இதில் உதவி இயக்குநர் பணிக்கு 74 பேரும், தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 101 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

news18
Updated: November 19, 2018, 7:02 PM IST
தமிழக வேளாண் துறையில் 175 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
175 பேர் அதிகாரியாக வாய்ப்பு
news18
Updated: November 19, 2018, 7:02 PM IST
தமிழக வேளாண் துறையில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.

காலி இடங்கள்: தமிழக வேளாண் துறையில் 175 அதிகாரி பணியிடங்கள்  காலியாக உள்ளன. இதில் உதவி இயக்குநர் பணிக்கு 74 பேரும், தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 101 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

வயது வரம்பு: 01-07-2018 தேதியன்று விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர், பி.சி. எம்.பி.சி, பி.சி.எம். மற்றும் விதவைப் பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை.

கல்வித் தகுதி: தோட்டக்கலை உதவி இயக்குநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எஸ்.சி. (தோட்டக்கலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி. (தோட்டக்கலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கடைசி தேதி:  விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.200-ம், விண்ணப்ப பதிவுக் கட்டணமாக ரூ.150-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 21. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in, http://tnpsc.gov.in/latest-notification.html ஆகிய வலைதளங்களை பார்க்கவும்.

Also watch

First published: November 19, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...