ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

10 வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழக ஊர்காவல் படையில் பணி!

10 வகுப்பு தேர்ச்சி போதும்... தமிழக ஊர்காவல் படையில் பணி!

ஊர்காவல் படை

ஊர்காவல் படை

சேலம் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாகவுள்ள 55 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Salem, India

  சேலம்‌ மாவட்டத்தில்‌ ஊர்காவல்‌ படையில்‌ காலியாகவுள்ள 55 இடங்களில் சேர விரும்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின் முழு விவரத்தை இங்கு தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

  தமிழக ஊர்காவல் படை பணியின் விவரங்கள்: 

  பணியின் பெயர்தமிழக ஊர்காவல் படை
  ஊர் சேலம்
  பணியிடங்கள்ஆண் - 52 பெண் - 3
  கல்வித்தகுதி10 வகுப்பு தேர்ச்சி
  வயது18யில் இருந்து 50 வயது வரை
  உயரம்ஆண்கள்- 167 செ.மீ பெண்கள்-157 செ.மீ

  இதர விவரங்கள்:

  நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது.

  சம்பளம்:

  ஊர்காவல் படைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மாதத்துக்கு 5 நாட்கள்‌ மட்டும்‌ பணிபுரிய அழைக்கப்படுவர்‌. பணிபுரியும்‌ நாட்களுக்கு தலா ரூ.560 வீதம்‌ மாதம்‌ ரூ.2,800 ஊதியம்‌ வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள்... முழு விவரம்!

  விண்ணப்பிக்கும் முறை:

  ஊர் காவல் படைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், வரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு ஆஜராகும்‌ போது புகைப்படம்‌ 2, கல்வித்‌ தகுதி சான்றிதழ்‌ மற்றும்‌ ஆதார்‌ கார்டு (அசல் மற்றும் நகல்கள்‌) கொண்டு வரவேண்டும்‌ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்வு நடக்கும் இடம் : சேலம்‌ மாவட்ட ஆயுதப்படை மைதானம்

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs