ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

1806 முதல் 1947 வரை... TNPSC குரூப் 1 தேர்வுக்கான வரலாற்று திருப்புதல் இதோ...!

1806 முதல் 1947 வரை... TNPSC குரூப் 1 தேர்வுக்கான வரலாற்று திருப்புதல் இதோ...!

வரலாறு

வரலாறு

13 நாட்கள் தான் இருக்கிறது என்று கவலை படாதீர்கள்... இதுவரை படித்த பாடங்களை மீண்டும் திருப்பி பாருங்கள். இணையதளங்களில் இலவச முழு தேர்வு வினாக்கள் கிடைக்கும். அதில் பயிற்சி செய்யுங்கள்..

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

நவம்பர் 19 ஆம் தேதி நடக்க இருக்கும் TNPSC குரூப் 1 தேர்வுக்கு தேர்வர்கள் தீவிரமாக தாயாகி வருவீர்கள். இன்னும் சரியாக இரண்டு வாரங்களில் TNPSC குரூப் 1 தேர்வு வர இருக்கிறது. உங்களது  கையெட்டு குறிப்புகளோடு திருப்புதல் செய்யும் நேரத்தில் அதை எளிதாக்க வரலாற்றின் காலக்கோட்டைத் தருகிறோம் . 

1806 வேலூர் கலகத்தில் இருந்து நாடு விடுதலை பெற்றது வரை உள்ள முக்கிய நிகழ்வுகளில் தொகுப்பு…

1806 வேலூர் கலகம்

1809 கிழக்கிந்திய கம்பெனியின் முதல் அமிர்தசரஸ் ஒப்பந்தம் ரஞ்சித் சிங்குடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1814 அட்மியா சபா, ராஜா ராம் மோகன் ராய்யால் நிறுவப்பட்டது.

1824 தயானந்த சரஸ்வதி பிறப்பு 

1829 சதி ஒழிப்பு நிகழ்த்தப்பட்டது.

1853 தபால் சேவை தொடங்கப்பட்டது

1853 ஏப்ரல் 16 ம் தேதி பாம்பே மற்றும் தானே இடையே முதல் ரயில்வே தொடங்கப்பட்டது.

1855 சாந்தல் கலகம்

1856 இந்து விதவைகள் மறுவாழ்வு சட்டம், 1856 ஜூலை 25

1856 ஜூலை 23 இல் பால கங்காதர் திலகர் பிறப்பு 

1856 ஆகஸ்ட் 20 ம் தேதி நாராயண குரு பிறப்பு 

1857 மும்பை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் என மூன்று பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டது.

1857 ம் ஆண்டு மே 10 அன்று முதல் இந்தியப் சுதந்திர போராட்டம் தொடங்கியது 

1858 பிபின் சந்திர பால் பிறப்பு நவம்பர் 7 (1858-1932)

1861 ரவீந்திரநாத் தாகூர் மே 8 ஆம் தேதி பிறந்தார்

1863 சுவாமி விவேகானந்தர் 12ம் ஜனவரி  தேதி பிறந்தார் (1863-1902)

1865 லாலா லஜ்பத் ராய் 28 ஜனவரி அன்று பிறந்தார் (1865-1928)

1865 கல்கத்தா, சென்னை, பாம்பே உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன

1867 பிரார்த்தன சமாஜ்  நிறுவப்பட்டது . ஆரம்பத்தில் இது "அத்மியா சபா" என்றழைக்கப்பட்டது.

1869 மகாத்மா காந்தி அக்டோபரில் 2இல் பிறந்தார் (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948)

கல்வி செயல்திறன் தரவரிசைக் குறியீட்டில் 3வது நிலைக்கு சறுக்கிய தமிழகம்!

1873 ஜோதி ராவ் பூலே "சத்யசோத்க் சமாஜ்" நிறுவினார்.

1875 ஆரிய சமாஜ் நிறுவப்பட்டது

1876 முகம்மது அலி ஜின்னா பிறந்தார் (1876-1948)

1877 முதல் தில்லி தர்பார் ஜனவரி 1 ஆம் தேதி நடத்தப்பட்டது.

1885 இந்திய தேசிய காங்கிரஸ் டிசம்பர் 28 அன்று நிறுவப்பட்டது

1889 ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்தார் (1889-1964)

1889 கேஷவ் பாலிரம் ஹெட்கேவார் (1 ஏப்ரல் 1889 - 21 ஜூன் 1940) டிசம்பர்3 அன்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தினை (ஆர்எஸ்எஸ்) நிறுவினார் .

1891 ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்தார் (1891-1956)

1895 ஜுத்து கிருஷ்ணமூர்த்தி மே 11 அன்று பிறந்தார் (மே 11, 1895 - பிப்ரவரி 17, 1986).

1897 சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23 அன்று பிறந்தார் (1897-1945)

1903 இரண்டாம் தில்லி தர்பார்

1904 பல்கலைக்கழக சட்டம்

1905 வங்காளப் பிரிவு அக்டோபர் 16 நிகழ்த்தப்பட்டது

1906 முஸ்லீம் லீக் டிசம்பர் 30 ம் தேதி தாக்கவில் (Dacca) உருவாக்கப்பட்டது

1907 சூரத் பிரிவினை

1909 மிண்டோ - மார்லி சீர்திருத்தங்கள்

1911 வங்க பிரிவினை ரத்து செய்யப்பட்டது

1911 மூன்றாவது தில்லி தர்பார்

1911 டிசம்பர் 12 ம் தேதி கொல்கத்தாவிலிருந்து டில்லிக்கு தலைநகரம் மாற்றம்

1913 இலக்கியத்தில் நோபல் பரிசை ரபீந்திரநாத் தாகூர் பெற்றார்

1914-1918 முதலாம் உலக போர்

1916 தன்னாட்சி இயக்கம்

1916 லக்னோ உடன்படிக்கை (காந்தி மற்றும் நேரு முதன்முதலில் சந்தித்த இடம்)

1917 ஆகஸ்ட் பிரகடனம்

1919 மான்டகு-சேம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள்

1919 ரௌலட் சட்டம் 

1919 ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலா பாக் போராட்டம் மற்றும் படுகொலை

1919 கிலாபத் இயக்கம்

1920 ஒத்துழையாமை இயக்கம்

1922 பிப்ரவரி 22 ம் தேதி வன்முறையாக மாறிய ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவு - சாரி சௌரா சம்பவம்

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயாராகிறீர்களா… முதன்மைத் தேர்வு இப்படி தான் இருக்கும்

1923 ஸ்வராஜ் கட்சி

1927 சைமன் கமிஷன்

1929 லாகூர் காங்கிரஸ்

1930 உப்பு வரியை எதிர்த்து நாடு முழுவதும் சத்தியாகிரகம்

1930 முதல் வட்ட மேசை மாநாடு

1931` காந்தி - இர்வின் ஒப்பந்தம்

1931 மார்ச் 23 அன்று பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் உயிர் துறந்தனர்

1931 இரண்டாம் வட்ட மேசை மாநாடு

1932 காந்தி- நேரு இடையான பூனா ஒப்பந்தம்

1932 மூன்றாவது வட்ட மேசை மாநாடு

1935 இந்திய அரசு சட்டம்

1937 இந்திய மாகாண தேர்தல்கள், 1937

1939 அகில இந்திய பார்வேர்ட் பிளாக்கட்சியை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார்.

1939 - 1945 இரண்டாம் உலகப் போர்

1940 மார்ச் 23 அன்று லாகூர் தீர்மானம் (பாகிஸ்தான் கோரிக்கை)

1940 ஆகஸ்ட் 8 ஆகஸ்ட் நன்கொடை

1942 க்ரிப்ஸ் தூதுக்குழு

1942 க்ரிப்ஸ் தூதுக்குழுவை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 இந்திய தேசிய இராணுவம் சுபாஷ் சந்திர போஸால் நிறுவப்பட்டது

1943 Arzi Hukumat-e-Azad Hind, சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசாங்கம் நேதாஜியால் அமைக்கப்பட்டது

1944 மகாத்மா காந்தியை தேச தந்தை என சுபாஷ் சந்திர போஸ் அழைத்தார்.

1946 ராயல் இந்திய கடற்படை கலகம்

1946 கேபினட் மிஷன்

1946 இடைக்கால அரசாங்கம்

1947 மவுண்ட் பேட்டர்ன் திட்டம் அல்லது ஜூன் 3 திட்டம்

1947 ஜூலை மாதம் - இந்திய சுதந்திர சட்டம்

1947 15 ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Competitive Exams, Tamil Nadu Government Jobs, TNPSC