ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Hindustan Petroleum Corporation Limited - HPCL) நிறுவனத்தில் டெக்னீஷியன் உட்பட மொத்தம் 186 பதவிகளுக்கான காலி இடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தொடங்கியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், என்னென்ன வேலைகளுக்கு என்னென்ன தகுதி மற்றும் எவ்வளவு சம்பளம், விண்ணப்பிக்க கடைசி தேதி எது? விண்ணப்பிப்பது எப்படி? என்கிற விவரங்களை அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஹெச்பிசிஎல் வேலைவாய்ப்பு 2022: எந்தெந்த பதவியில் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
ஆப்ரேஷன்ஸ் டெக்னீஷியன்: 94 பணியிடங்கள்
பாய்லர் டெக்னீஷியன்: 18 பணியிடங்கள்
மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (மெக்கானிக்கல்): 14 பணியிடங்கள்
மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (எலக்ட்ரிக்கல்): 17 பணியிடங்கள்
மெயின்டனன்ஸ் டெக்னீசியன் (இன்ஸ்ட்ருமென்டேஷன்): 9 பணியிடங்கள்
லேப் அனலிஸ்ட் : 16 பணியிடங்கள்
ஜூனியர் ஃபையர் அன்ட் சேஃப்டி இன்ஸ்பெக்டர்: 18 பணியிடங்கள்
ஹெச்பிசிஎல் வேலைவாய்ப்பு 2022: கல்வித் தகுதி?
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து தகுதிகளும் அந்தந்த மாநில வாரியம் அல்லது பொருந்தக்கூடிய தகுதி வாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட ஃபுல்டைம் ரெகுலர் கோர்ஸ்களாக இருக்க வேண்டும். அதாவது பார்ட் டைம் அல்லது டிஸ்டன்ஸ் வழியிலான கல்வித் தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- ஜூனியர் ஃபயர் & சேஃப்டி இன்ஸ்பெக்டர் பதவிகளைத் தவிர, விண்ணப்பதாரர்கள் (ஜெனரல், இடபுள்யூஎஸ் மற்றும் ஓபிசி-என்சி பிரிவைச் சேர்ந்தவர்கள்) தகுதியான டிப்ளமோ / பட்டப்படிப்புத் தேர்வுகளில் குறைந்தபட்சம் 60% (அனைத்து செமஸ்டர்கள்/ஆண்டுகளிலும்) மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். எஸ்இ/ எஸ்டி/பிடபுள்யூபிடி விண்ணப்பதாரர்கள் (அனைத்து செமஸ்டர்கள்/ஆண்டுகளிலும்) 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஹெச்பிசிஎல் வேலைவாய்ப்பு 2022: தேர்வு நடைமுறை
அந்தந்த பதவிகளுக்கு மேலே உள்ள அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பொதுத் திறனாய்வுத் தேர்வு மற்றும் தொழில்நுட்பம் / தொழில்முறை அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (Computer Based Test - CBT) அழைக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் 22 நகரங்களில் இந்த சிபிடி நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஹெச்பிசிஎல் வேலைவாய்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
யுஆர், ஓபிசி-என்சி மற்றும் இடபுள்யூஎஸ் பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பிடபுள்யூபிடி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஹெச்பிசிஎல் வேலைவாய்ப்பு 2022: ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
- நிறுவனத்தின் அதிகாரபூர்வமான hindustanpetroleum.com என்கிற இணையதளத்திற்குள் செல்லவும்
- அங்கே கேரியர்ஸ் (Careers) என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- இப்போது ஜாப் ஓப்பனிங் (Job opening) பிரிவை கிளிக் செய்யவும்.
- பின்னர் ரெக்ரூட்மென்ட் ஆப் டெக்னிஷியன்ஸ் (Recruitment of Technicians) விருப்பத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அப்ளை நௌவ் (Apply Now) விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
- தேவைப்பட்டால் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
ஹெச்பிசிஎல் அறிவித்துள்ள இந்த காலி இடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக மே 21, 2022 அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job search, Job vacancies